“யாருக்கும் ஓய்வு கிடையாது”.. வீரர்களிடம் கரார் காட்டிய பிசிசிஐ?..டிச.11ம் தேதிக்காக பெரும் முடிவு!
மும்பை: இந்திய அணி வீரர்களுக்கு ஒரு வாரம் கூட ஓய்வு கிடையாது என பிசிசிஐ தரப்பில் கராராக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து தொடரை வெற்றிகரமாக முடித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்கவிருந்த இந்த தொடர் ஓமிக்ரான் வைரஸ் தாக்கத்தால் டிசம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வீரர்கள் ஓய்வு
இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் தற்போது ஓய்வில் உள்ளனர். இதே போல நியூசிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்கள் நேற்றுதான் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

பிசிசிஐ உத்தரவு
இந்நிலையில் ஓய்வுக்கு சென்றிருக்கும் வீரர்கள் மூன்றே நாட்களில் அணிக்கு திரும்ப வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது இந்திய அணி வீரர்களுக்காக மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் பயோ பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் அனைத்து வீரர்களும் வந்துவிட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

பயிற்சி எப்போது
பயோ பபுளுக்குள் ஒரு வார காலம் தங்கவைக்கப்பட்ட பின்னர், 18 அல்லது 19ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு செல்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அந்த நாட்டிற்கு சென்றவுடன் பபுள் டூ பபுள் மாற்றம் தான் இருக்கும் எனவும், 4 நாட்கள் வரை பயிற்சி மேற்கொள்வார்கள்.

போட்டி அட்டவணை
முதல் டெஸ்ட் போட்டி = 2021 டிசம்பர் 26 - 30
2வது டெஸ்ட் போட்ட் = 2022 ஜனவரி 3 - 7
3வது டெஸ்ட் போட்டி = 2022 ஜனவரி 11 - 15
முதல் ஒருநாள் போட்டி = 2022 ஜனவரி 19
2வது ஒருநாள் போட்டி = 2022 ஜனவரி 21
3வது ஒருநாள் போட்டி = 2022 ஜனவரி 23


Click it and Unblock the Notifications