Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி? நீண்ட ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.. கசிந்தது தகவல்!

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் யார் வெற்றியாளர் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மதியம் மான்செஸ்டரில் நடைபெறவிருந்தது.

ஆனால் இந்திய அணியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

அதிகரித்த கொரோனா

அதிகரித்த கொரோனா

இந்திய அணியில் முதலில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு உறுதியான கொரோனா தொற்று பின்னர் பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் என அதிகரித்த வண்ணம் உள்ளது. வீரர்களுக்கு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளபோதும் தொடர்ந்து குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

குழப்பம்

குழப்பம்

ஆபத்தை உணராமல் வீரர்களை விளையாட வைத்தால், பாதிப்பு அதிகரிக்கும் எனக்கூறி இந்த போட்டியில் இருந்து இந்திய அணி விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துவிட்டது. எனினும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. இதனால் யார் வெற்றியாளர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

வெற்றியாளர் யார்?

வெற்றியாளர் யார்?

இந்திய அணி தான் வெளியேற விரும்பியதால், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக கருதி 2 - 2 என தொடர் சமன் அடைந்ததாக அறிவிக்க அந்நாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆனால் ரத்து செய்யப்படும் போட்டியில் எப்படி தோல்வி எனக்கூறுவீர்கள், எனவே இந்தியா தான் வெற்றி பெற்றது என பிசிசிஐ போர்க்கொடி தூக்கியுள்ளது.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இரு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயும் நடைபெற்ற நீண்ட நேர ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 5வது டெஸ்ட் போட்டியை ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு வேறு ஒருநாளில் நடத்தி முடித்துக்கொள்ளலாம், அதுவரை இந்த தொடர் முடிவு எட்டப்படாததாகவே இருக்கட்டும் என பிசிசிஐ தரப்பில் பேசியுள்ளதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Story first published: Friday, September 10, 2021, 17:06 [IST]
Other articles published on Sep 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+