Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சானியா மிர்சாவுக்கு விவாகரத்து??.. சோயிஃப் மாலிக்கின் ஏமாற்று செயல்கள் அம்பலமானதா?.. ரசிகர்கள் ஷாக்

துபாய்: இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரர் சோயிஃப் மாலிக் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய டென்னிஸ் ஜாம்பவானாக கொண்டாடப்பட்டவர் சானியா மிர்சா. இவர் பாகிஸ்தானை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர் சோயிஃப் மாலிக்கை திருமணம் செய்துக்கொண்டார்.

விளையாட்டு உலகில் பல்வேறு ஜோடிகள் பிரபலமாக இருந்தாலும், வெவ்வேறு நாட்டை சேர்ந்த இவர்களின் காதல் தான் ரசிகர்களிடையே இன்று வரை ஆச்சரியமாக இருந்து வருகிறது.

திருமண வாழ்வு

திருமண வாழ்வு

இரு நாடுகளின் புகழ்பெற்ற விளையாட்டு பிரபலங்களாக இருந்த இவர்கள் இருவரும் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் சந்தித்துக்கொண்டனர். 5 மாதங்களாக டேட்டிங் செய்த பின்னர் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த போதும், அவற்றினை மீறி கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

விவாகரத்து

விவாகரத்து

கடந்த 12 வருடங்களாக நட்சத்திர தம்பதியாக வலம் வந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சானியாவை சோயிப் ஏமாற்றியதாகவும், இதுகுறித்து உண்மை தெரியவரவே இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே இவர்கள் பிரிந்து தான் வாழ்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறைமுக தகவல்

மறைமுக தகவல்

இந்த தகவலை சானியா மிர்சா மறைமுகமாக உறுதி செய்துள்ளார். அவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளில், "உடைந்த மனங்கள் எங்கு செல்லும், இறைவனிடம் தான்", கடினமான காலங்களில் எனக்கு உறுதுணையாக இருப்பது மகன் தான் போன்ற பதிவுகளை அவர் செய்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து உறுதியாகியுள்ளது.

மகனின் நிலை என்ன?

மகனின் நிலை என்ன?

சானியா மிர்சா - சோயிஃப் மாலிக் தம்பதிக்கு 3 வயதில் இஸ்சான் மிர்சா மாலிக் என மகன் உள்ளார். இனி இருவரும் குறிப்பிட்ட நாட்களை பிரித்துக்கொண்டு மகனுடன் நேரத்தை செலவிடுவார்கள் எனத் தெரிகிறது. எனினும் தற்போது வரை இவர்கள் இருவருமே இந்த விவகாரம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 8, 2022, 17:14 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+