Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“10 இல்ல வெறும் 3 தான்..!!" ஐபிஎல் 2022-க்காக முடிவை மாற்றிக்கொண்ட பிசிசிஐ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ பல்வேறு மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

புதிதாக வரும் 2 அணிகள், மெகா ஏலம் என இந்தாண்டு பெரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருந்தே அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

ஆனால் அதற்கெல்லாம் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சமீபத்தில் ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட பல உள்நாட்டு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதே போல பிப்ரவரி 12 - 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் மெகா ஏலமும் ஒத்திவைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதிலேயே தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அவசரக்கூட்டங்கள்

அவசரக்கூட்டங்கள்

இந்தாண்டு 10 அணிகளுக்காகவும் இந்தியாவில் 10 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்து வைத்திருந்தது. அதன்படி ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை என ஒன்றரை மாத காலம் போட்டிகளை நடந்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா பாதிப்பால் திட்டங்களை மாற்ற பிசிசிஐ-ல் அவசர கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ப்ளான் பி என்ன

ப்ளான் பி என்ன

இந்த கூட்டத்தில் "ப்ளான் பி" குறித்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமடைந்தால், மும்பையில் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. மும்பை நகரத்தில் வான்கடே, சிசிஐ, பாட்டில் ஸ்டேடியம் என 3 மைதானங்கள் ஐபிஎல் போட்டிகளை நடந்த உகந்ததாக உள்ளது. இதனை புக் செய்ய தான் ஏற்பாடுகள் நடத்தப்படுகின்றன.

 மும்பையில் அமீரக திட்டம்

மும்பையில் அமீரக திட்டம்

அமீரகத்திலும் 3 மைதானங்களில் மட்டுமே ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரும் நடத்தி முடிக்கப்பட்டன. எனவே மும்பையில் அதே போன்று 3 மைதானங்களுக்கும் பேருந்து வழி பயணத்தை ஏற்படுத்தி வீரர்களை பாதுகாக்க முடியும். இதே போல வீரர்களின் சிரமங்களை குறைக்க டபுள் எட்டர்ஸும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. IPL 2022-க்கு Plan B-ஐ தயார் செய்யும் BCCI
எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஐபிஎல் 2022ம் ஆண்டு தொடருக்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டன. அடுத்ததாக எந்த வீரர்களை ஏலம் எடுக்க போகின்றன என்பது குறித்து தான் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், டேவிட் வார்னர், ஹர்திக் பாண்ட்யா என பல முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர்.

Story first published: Monday, February 7, 2022, 16:41 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+