சிஎஸ்கே கேப்டனாகும் வில்லியம்சன்? 3 முக்கிய காரணத்திற்காக தோனி முடிவு.. ஐபிஎல் ஏலத்தில் ட்விஸ்ட்!
கொச்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக வில்லியம்சன் பொறுப்பேற்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 2023ம் ஆண்டுக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை ( டிசம்பர் 23 ) கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் அனைத்து அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
10 அணிகள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரர்களை தேர்வு செய்யவுள்ளது என்பதை பார்க்க தனி ஆர்வம் எழுந்துள்ளது. இதற்கு காரணம் தோனியின் கடைசி ஐபிஎல்-ஆக இது இருக்கலாம் என்பது தான்.

சிஎஸ்கே திட்டம்
18 வீரர்களை தக்கவைத்துள்ள சிஎஸ்கே அணி மொத்தம் ரூ.20.45 கோடியை தன்னிடம் வைத்துள்ளது. இதனை வைத்து 7 வீரர்களை அந்த அணி வாங்கலாம். அதன்படி பார்த்தால் பிராவோவுக்கு மாற்றாக சாம் கரண், உத்தப்பாவுக்கு மாற்றாக மணிஷ் பாண்டே, ரெய்னாவுக்கு மாற்றாக ஜோஸுவா லிட்டில், விக்கெட் கீப்பிங்கிற்காக என்.ஜெகதீசன் போன்ற வீரர்களை குறிவைத்துள்ளது.

அடுத்த கேப்டன் யார்?
இந்நிலையில் தோனியின் கேப்டன்சி பொறுப்பை அடுத்ததாக யார் ஏற்றுக்கொள்வார் என்பதற்கான விடை தற்போது கசிந்துள்ளது. நியூசிலாந்தின் கேப்டனான கேன் வில்லியம்சன் தான் அது. ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்தாண்டு கழட்டிவிடப்பட்டுள்ளார். மோசமான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. எனினும் எதற்காக சிஎஸ்கே மட்டும் அவரை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கிறது.

அப்படி என்ன காரணம்
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான களங்களில் வெற்றிகளை குவிப்பதில் வில்லியம்சன் கை தேர்ந்தவர். சிஎஸ்கே பாதி ஆட்டங்களை சென்னை போன்ற சூழலுக்கு சாதகமான களத்தில் தான் ஆடவுள்ளது. எனவே அவர் சரியான தேர்வாக இருப்பார். மற்றொரு சுவாரஸ்ய காரணம் தோனியும் - வில்லியம்சனும் ஒன்று என்பது தான். வீரர்களை கையாள்வது, களத்தை புரிந்து ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வது, சூழலுக்கு ஏற்ப அணியை காப்பாற்றுவது என மிஸ்டர் கூல் கேப்டன் தான் வில்லியம்சனும்.

3வது காரணம்
இதையெல்லாம் விட பெரிய காரணம் என்னவென்றால் தொகை தான். வில்லியம்சனின் அடிப்படை தொகை ரூ.2 கோடியாகும். அவர் நல்ல ஃபார்மில் இருந்திருந்தால் சிஎஸ்கேவால் எட்டிப்பிடிக்கவே முடியாது. ஆனால் தற்போது அடிப்படை தொகையிலேயே வாங்கிவிட முடியும். இது சிஎஸ்கேவுக்கு அடித்த மெகா அதிர்ஷ்டம் ஆகும். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications