Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் - தோனி கூட்டணியில் திரைப்படம்.. ஒரே ஒரு கண்டிஷனுக்கும் ஓகே.. கோலிவுட்டில் இனி மஜா தான்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் - எம்.எஸ்.தோனி காம்போவில் திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு தமிழகத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வரும் எம்.எஸ்.தோனி, மற்ற சமயங்களில் தொழிலதிபராக செயல்பட்டு வருகிறார்.

தோனியின் பிசினஸ்

தோனியின் பிசினஸ்

கோழிப்பண்ணை, விவசாயம், பீர் தயாரிப்பு நிறுவனம், உடற்பயிற்சி கூடம், ஆடைத் துறை என பல்வேறு தொழில்களில் தோனி முதலீடு செய்துள்ளார். அவரின் அடுத்தகட்ட திட்டம் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளர் ஆவது தான். இதற்காக தோனி எண்டர்டெயிண்மெண்ட் என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

தயாரிப்பாளர் அவதாரம்

தயாரிப்பாளர் அவதாரம்

பாலிவுட் அளவில் இருந்து வந்த தோனி, தமிழ் திரையுலகிலும் கால்பதிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதலும் போடப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. எனினும் தற்போது எந்த ஒப்புதலும் போடப்படவில்லை என தோனி தரப்பில் அறிக்கை வெளியானது.

விஜய் தான் நாயகன்

விஜய் தான் நாயகன்

இந்நிலையில் தோனியின் தயாரிப்பில் நடிகர் விஜய் தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியும் - விஜய்யும் சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் நட்பு ரீதியாக பேசினர் என கூறிய சூழலில் திரைப்பட ஒப்பந்தம் குறித்து தான் பேசினர் என தற்போது தெரியவந்துள்ளது. தோனியின் தயாரிப்பில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

என்ன கண்டிஷன்

என்ன கண்டிஷன்

எனினும் ஏற்கனவே விஜய் அடுத்த 2 படங்களுக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டதால், அவற்றை முடித்துவிட்டு, நிச்சயம் நடித்துக்கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. தமிழில் என்ட்ரி கொடுக்கும் போது பெரிய ஹீரோவை வைத்து படம் தயாரித்தால், நன்றாக இருக்கும் என்பதை தோனி நன்கு புரிந்து வைத்துள்ளார்.

Story first published: Sunday, June 19, 2022, 22:13 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+