Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி நீக்கத்திற்கு பின் சிஎஸ்கே உரிமையாளரா??.. பழிதீர்த்தாரா சீனிவாசன்.. வெளியான பரபரப்பு தகவல்!

மும்பை: சவுரவ் கங்குலியின் பதவி நீக்கத்திற்கு பின்னால் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் தான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 18ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

மீண்டும் சவுரவ் கங்குலி தான் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது.

சவுரவ் கங்குலி நீக்கம்

சவுரவ் கங்குலி நீக்கம்

சவுரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு பின்னரும் பிசிசிஐ பதவியில் இருக்கலாம் என வழக்கு தொடர்ந்து வென்றனர். ஆனால் ஜெய் ஷாவுக்கு மட்டுமே அது சாதகமாக அமைந்துள்ளது. சவுரவ் கங்குலியை 2வது முறையாக பதவியில் அமர்த்த விருப்பமில்லை என்றும் ரோஜர் பின்னியை புதிய தலைவராக நியமிக்கவுள்ளதாகவும் பிசிசிஐ உயர்மட்ட குழு முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து பதவியில் நீடிக்க சவுரவ் கங்குலியே விருப்பம் தெரிவித்த போதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சீனிவாசன் காரணமா?

சீனிவாசன் காரணமா?

இந்நிலையில் இந்த திடீர் ட்விஸ்டிற்கு காரணம் முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவரும், சிஎஸ்கே உரிமையாளருமான சீனிவாசன் தான் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் ( Telegraph ) செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2019ம் ஆண்டு பிரிஜேஸ் பட்டேலை பிசிசிஐ தலைவராக கொண்டு வர சீனிவாசம் பெரும் முயற்சி செய்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் கங்குலி பதவியை பிடித்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபர குற்றச்சாட்டு

பரபர குற்றச்சாட்டு

எனவே தனது வார்த்தைகளுக்கு மதிப்பு உள்ளது என்பதை நிரூபிக்க நினைத்துள்ளார் எனக்கூறப்படுகிறது. அதன்படி புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் கங்குலி, எதிர்பார்த்த எந்த விஷயங்களையும் பூர்த்தி செய்யவில்லை என குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களும் குற்றச்சாட்டை முன்வைத்ததால் தான் கங்குலிக்கு எதிரான விஷயங்கள் நடந்தன.

பின்னணியில் பாஜக ?

பின்னணியில் பாஜக ?

இதுஒருபுறம் இருக்க, பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரும் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. கங்குலியின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தேர்தலுக்காக உதவுவார் என்று நினைத்து பாஜக கட்சி அவரை பிசிசிஐ தலைவராக்க உதவியதாகவும், ஆனால் பதவியேற்ற பின்பு கங்குலி உதவவில்லை எனத்தெரிகிறது. இதனால் அவருக்கு தற்போது ஆதரவுக்கரம் நீட்டவில்லை எனத்தெரிகிறது.

Story first published: Thursday, October 13, 2022, 21:08 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+