ஜடேஜாவுக்கு வந்த பெரும் கண்டம்.. டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகல்?.. ரோகித்திற்கு தலைவலி உறுதி!
துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்களது அணி வீரர்களை அறிவித்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை போட்டி
வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி ஏற்கனவே கூறியிருந்தது. அந்தவகையில் 15 பேர் கொண்ட இந்திய அணியும் வரும் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இதில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை பரிந்துரை கூட செய்யமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காயம்
முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருந்தார். அவரை தீவிர பரிசோதனை செய்த மருத்துவர்கள், காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதாக கூறியுள்ளனர். ஏற்கனவே ஏற்பட்டிருந்த காயத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விலகுவது உறுதி
தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ள ஜடேஜா, விசா ஏற்பாடுகளை செய்துவிட்டு, அங்கிருந்து அயல்நாட்டிற்கு பயணம் செய்யவுள்ளார். ஒருவேளை அறுவை சிகிச்சைகள் செய்துக்கொண்டால், குறைந்தது 2 மாதங்கள் ஓய்வு பெற வேண்டியிருக்கும் என்பதால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று வீரர் யார்?
ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேல் வாய்ப்பு பெறவுள்ளார். ஆனால் ஜடேஜாவை போன்று டாப் ஆர்டரிலும் சிறப்பாக பேட்டிங் செய்வாரா என்பது சந்தேகம் தான். எனவே சில மாற்று ஏற்பாடுகளுடன் தான் ரோகித் சர்மாவின் படை செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications