Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதுதான் கடைசி வாய்ப்பு” முக்கிய வீரருக்கு ரோகித் கொடுத்த எச்சரிக்கை.. முதல் டெஸ்டுகாக அதிரடி முடிவு

மொஹாலி: இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவருக்கு கேப்டன் ரோகித் சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொஹாலியில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்யும் பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணி கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படு மோசமாக தோற்றது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசையிலும் எதிரொலித்துள்ளது. எனவே இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை ரோகித் எடுத்து வருகிறார். அதன்படி புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் நீக்கப்பட்டனர்.

பண்ட்-ன் இடம் காலி

பண்ட்-ன் இடம் காலி

இந்நிலையில் ரிஷப் பண்ட்-ஐயும் நீக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். மேலும் 7 முறை ஒற்றை இலக்க ரன்களை மட்டும் அடித்து படுமோசமாக அவுட்டாகியுள்ளார். தனது இயற்கையான ஆட்டம் எனக்கூறிக் கொண்டு எப்போது அதிரடி மட்டுமே காட்டி வருகிறார். இது அணிக்கு பின்னடைவை கொடுக்கிறது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இதனால் இவரின் இடத்தில் கே.எல்.ராகுலை களமிறக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் இல்லையென்பதால், பண்ட்-ஐ தான் பயன்படுத்தி ஆக வேண்டும். எனவே இதுதான் கடைசி வாய்ப்பு, இதனை சரியாக பயன்படுத்தினால் தான் இனி வரும் போட்டிகளில் வாய்ப்பு தரப்படும் என ரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

Recommended Video

IND vs SL : Mohali To Allow 50 Percent Crowd For Virat Kohli’s 100th Test | Oneindia Tamil
சஞ்சு சாம்சன் போட்டி

சஞ்சு சாம்சன் போட்டி

பண்ட்-ன் இடத்திற்கு மற்றொரு புறம் சஞ்சு சாம்சனும் போட்டியாக வந்து நின்றுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எனவே விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரின் இடத்தை சஞ்சு சாம்சன் பறிக்க வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Thursday, March 3, 2022, 13:50 [IST]
Other articles published on Mar 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+