
டெஸ்ட் தொடர்
டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியதற்கு முக்கிய காரணமாக இருந்தது நியூசிலாந்து அணி தான். எனவே அதற்கு பழிதீர்க்கும் பணியை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செய்து முடித்தது. இதே போன்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கும் நியூசிலாந்தை பழிவாங்க முணைப்பு காட்டி வருகிறது.

அணித் தேர்வு
எனவே இப்படிபட்ட முக்கிய தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் இடங்களில் இளம் வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அறிமுகமாகும் சூர்யகுமார்
அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்திற்கு சூர்யகுமார் யாதவை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார், ஜூலை மாதத்திலேயே ஒருநாள் போட்டியிலும் தடம்பதித்தார். இந்நிலையில் இதே ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video

புள்ளிவிவரம்
31 வயதாகும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 77 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம் மற்றும் 26 அரைசதத்துடன் 5,356 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரின் சராசரி 44 ஆக உள்ளது. எனவே கோலி இல்லாத சமயத்திலேயே சூர்யகுமார் யாதவை உபயோகப்படுத்தி பார்த்துவிட வேண்டும் என ராகுல் டிராவிட் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் சிறப்பாக விளையாடிவிட்டால், கோலிக்கு அடுத்தபடியாக அணியில் அவர் இருப்பார் என்பது உறுதியாகிவிடும்.


Click it and Unblock the Notifications











