For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கல்யாணம் ஆகி 2 வருஷம் கூட ஆகல”.. யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ வெர்மா விவகாரத்து முடிவா??.. ஆதாரம் இதோ!!

மும்பை: இந்திய அணி வீரர் யுவேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ ஆகியோர் பிரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs ZIM Deepak Chachar மிரட்டல்! Zimbabwe அணி பரிதாபம் *Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வலம் வருபவர் யுவேந்திர சாஹல்.

ஃபார்ம் அவுட்டில் இருந்து வந்த சாஹல், ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்து தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

சாஹல் - தனஸ்ரீ ஜோடி

சாஹல் - தனஸ்ரீ ஜோடி

தனது வேடிக்கையான செயல்கள் மற்றும் போஸ்களால் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த யுவேந்திர சாஹல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார். இருவரும் சேர்ந்து நடமாடும் டிக்டாக் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இதன் மூலம் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக இடம்பிடித்தனர்.

 பிரிய முடிவு

பிரிய முடிவு

இந்நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக ரகசியமாக முறையீடு செய்துள்ளதாகவும், விரைவில் பிரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அமைந்துள்ளது.

அப்படி என்ன பதிவு

அப்படி என்ன பதிவு

இன்ஸ்டாகிராம் தனஸ்ரீ வெர்மா தனது பெயரின் பின் இருந்த சாஹல் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். சகஜமாக தனஸ்ரீ என்று மட்டும் மாற்றியுள்ளார். இதே போல புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சாஹல், அதில் இனி புதிய வாழ்க்கை தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் பிரியவிருப்பது தெரியவருகிறது.

 குழந்தை பிறக்கிறதா?

குழந்தை பிறக்கிறதா?

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள இந்த ஜோடிக்கு குழந்தை எதுவும் கிடையாது. எனவே மற்றொரு தரப்பினர் இருவருக்கும் குழந்த பிறக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக தான் சாஹல் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என்பது குறித்து சாஹல் தான் விளக்க வேண்டும்.

Story first published: Thursday, August 18, 2022, 16:44 [IST]
Other articles published on Aug 18, 2022
English summary
Yuzvendra Chahal wife dhanashree verma ( யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ வெர்மா ) கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வெர்மா விவகாரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+