Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஷிகர் தவான் ஒப்புக்கு சப்பாணியா”.. தேர்வுக்குழு தலைவர் சொன்ன சூசக தகவல்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய சீனியர் வீரர் ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி 19ம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் - ஜூனியர் என கலவையான வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியினர்

இந்திய அணியினர்

இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இதனையடுத்து ஓப்பனிங்கிற்கு இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த தவான், ரோகித்தின் காயம் காரணமாக தான் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

தென்னாப்பிரிக்க களத்தை பொறுத்தவரையில் ஓப்பனிங் ஜோடி நின்று விளையாடுவது முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் ரோகித் போன்ற அனுபவ வீரருக்கு மாற்றாக மற்றொரு சீனியர் வீரரான ஷிகர் தவான் தான் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வரவிருக்கும் ஏமாற்றம்

வரவிருக்கும் ஏமாற்றம்

இந்நிலையில் அவரின் வாய்ப்பை இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பரித்து விடுவார் போல தெரிகிறது. இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா, ருதுராஜுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. டி20 அணியில் ஏற்கனவே விளையாடினார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் கலக்கப்போகிறார். அவர் எப்போதும் சிறப்பாக விளையாடுவார் என தேர்வுக்குழு கருதுகிறது என தெரிவித்துள்ளார்.

பறிபோகிறதா வாய்ப்பு

பறிபோகிறதா வாய்ப்பு

சேட்டன் சர்மாவின் இந்த கருத்தை வைத்து பார்த்தால் கே.எல்.ராகுல் - ருதுராஜ் கெயிக்வாட் ஜோடி தான் ஓப்பனிங் களமிறங்கும் என தெரிகிறது. இதற்கேற்றார் போல அவர் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசியுள்ளதால் முதல் போட்டியிலேயே தவானின் இடத்தை பறிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இறுதி முடிவு என்ன

இறுதி முடிவு என்ன

எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கே.எல்.ராகுல் மட்டுமே. டிராவிட் ஏற்கனவே ஃபார்மில் இல்லாத ரகானே, புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து முதல் டெஸ்டில் வாய்ப்பளித்தார். அந்தவகையில் ஷிகர் தவானுக்கும் வழங்குவார் என்றும் மற்றொரு புறம் கூறப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, January 1, 2022, 19:38 [IST]
Other articles published on Jan 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+