Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை”.. விராட் கோலிக்கு வந்த சோகம்.. கங்குலி வைத்த செக் - விவரம்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ரஞ்சிக்கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Virat Kohli To Play In Ranji Trophy After Shows Poor Performance | Oneindia Tamil

இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது பெரும் சர்ச்சையாக மாறியது.

முக்கியமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி - கோலி இடையே இருந்த கருத்து வேறுபாடு வெளிப்படையாக தெரியவந்தது.

புது பிரச்சினை

புது பிரச்சினை

இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என நினைத்த சூழலில் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விராட் கோலி தற்போது கேப்டன்சி பொறுப்பு இன்றி முழு நேர பேட்ஸ்மேனாக கவனம் செலுத்தி வருகிறார். எனினும் அவரால் பழைய ஃபார்முக்கு வர முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற இலங்கை தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை.

கங்குலி ஸ்கெட்ச்

கங்குலி ஸ்கெட்ச்

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கங்குலி, விராட் கோலி இனி ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி தன்னை நிரூபித்தால் தான் இந்திய அணியில் வாய்ப்பு என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் ஜூன் மாதத்தில் ரஞ்சிக்கோப்பை தொடரின் 2வது பகுதியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவுள்ளார்.

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இருந்து விலகி தான் டெல்லி அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் களமிறங்கவுள்ளார் கோலி. இதில் சதமடித்த பிறகு தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தப்பிக்கும் வழி

தப்பிக்கும் வழி

இதில் இருந்து தப்பிக்க ஒரே வழியாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. கோலி மட்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி விட்டால், நேரடியாக தென்னாப்பிரிக்க தொடருக்கு தேர்வாகிவிடுவார். அப்படி இல்லையென்றால், இனி அவரை இந்திய ஜெர்ஸியில் பார்ப்பது கடினம். ஏற்கனவே புஜாரா, ரகானே போன்ற வீரர்களும் ரஞ்சிக்கோப்பைக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 21, 2022, 14:04 [IST]
Other articles published on Mar 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+