Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்

லார்ட்ஸ்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்துடனான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்த ஒரு அலசல்:

குல்தீப் எடுபடவில்லை

குல்தீப் எடுபடவில்லை

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்திய போதும் பிறகு ரன்களை வாரி இறைத்தார். முதலாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவரது பந்துவீச்சு இந்திய போட்டியில் ஈடுபடாதது ஒரு முக்கிய காரணம். அவர் 10 ஓவர்களில் 68 ரன்களை விட்டு கொடுத்தார்.

வேகம் இல்லாத பாஸ்ட்

வேகம் இல்லாத பாஸ்ட்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எள்ளளவும் எடுபடவில்லை. சித்தார்த் கவுல்,உமேஷ் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா மூவரும் இணைந்து 28 ஓவர்களை வீசி 192 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அவர்கள் வீழ்த்தியது 2 விக்கெட்கள் மட்டுமே. மூவரில் ஒருவரது சராசரி கூட 6 ரன்களுக்கு கீழே இல்லை. இவர்கள் துவக்கத்தில் இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்த தவறுவதும் தோல்விக்கான முக்கிய காரணமாகும்.

நடுவரிசை சரியில்லை

நடுவரிசை சரியில்லை

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் ஆர்டர் வலிமையற்றதாகவே உள்ளது. துவக்க வீரர்கள் மற்றும் கோஹ்லிக்கு பிறகு வரும் நடுவரிசை வீரர்கள் நிலைத்து ஆடுவதில்லை. நேற்றைய போட்டியை தவிர்த்து அதற்கு முன்னால் முன்னாள் நடைபெற்ற 8 போட்டிகளில் முன்வரிசை 3 வீரர்களில் ஒருவர் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் மற்றும் ரெய்னா தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இக்கட்டான நிலையில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய ஒருவர் நடுவரிசையில் கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவை.

கடைசி ஓவர்களில் மோசம்

கடைசி ஓவர்களில் மோசம்

இங்கிலாந்து அணி கடைசி 8 ஓவர்களில் 63 ரன்களை குவித்தது. ஆல் ரவுண்டர் வில்லி தனது முதலாவது அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அவர் 30 ரன்களில் 50 ரன்களை எடுத்தார். பும்ரா இல்லாதது இறுதி ஓவர்களில் ரன்குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது. இன்னும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் இந்திய அணி தனது குறைகளை கண்டிப்பாக சரி செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Sunday, July 15, 2018, 15:47 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+