Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி ஓய்வு பெற நானும், கோஹ்லியும் தான் காரணமா?: ரவி சாஸ்திரி

சிட்னி: கோஹ்லிக்கும் தனக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதை பார்த்து ஒன்றும் டோணி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மஹேந்திர சிங் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது பற்றி அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

டோணி

டோணி

வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு வந்த டோணி, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். அதை கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

குடும்பம்

குடும்பம்

டோணி தனது ஓய்வு குறித்து நன்கு யோசித்த பிறகே முடிவை அறிவித்தார் என்பது அவர் தெரிவித்த விதத்தில் இருந்தே தெரிந்தது. ஓய்வு முடிவை அவர் குடும்பத்தாரிடம் கூட தெரிவிக்கவில்லை. முதலில் அணியிடம் தான் தெரிவித்தார்.

மரியாதை

மரியாதை

டோணியின் நேர்மையை பார்த்து அவர் மீது வைத்திருந்த மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அவர் ஒரு ஜாம்பவான். அவர் எண்கள் அல்லது புகழைத் தேடி அலையவில்லை.

அணி

அணி

இனியும் தான் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அணிக்கு நல்லது அல்ல என்பதை டோணி உணர்ந்திருந்தார். கோஹ்லி அணியை வழிநடத்த தயாராக இருந்ததை அவர் புரிந்து கொண்டார். அணியின் எதிர்காலம் நல்ல கைகளில் உள்ளதை அவர் தெரிந்து கொண்டார்.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லிக்கும் எனக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதை பார்த்து ஒன்றும் டோணி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவில்லை. கோஹ்லி வளர்ச்சி பெற அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றார் ரவி சாஸ்திரி.

Story first published: Sunday, January 4, 2015, 15:24 [IST]
Other articles published on Jan 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+