அன்னிக்கு சேவாக், சச்சின், எனக்கு சொன்னீங்களே தோனி.. இப்போ பாத்தீங்களா உங்க நிலைமையை..!!
Recommended Video
டெல்லி: ஆஸி. தொடரின் போது எனக்கும், சேவாக்குக்கும் அப்போது கேப்டனாக இருந்த தோனி என்ன கூறினார் என்பது இப்போது ஞாபகம் வருகிறது என்று முன்னாள் வீரரும், எம்பியுமான கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடருடன் இந்திய அணி முன்னாள் கேப்டன், தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக அவர் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவர் மற்ற வீரர்களை போல திறன் அடிப்படையில் அணியில் இருப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இனி இந்தியா மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மை விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பன்டுக்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் என்று செய்திகள் கூறுகின்றன.

சிறிது பங்களிப்பு
தோனி தற்போதைய நிலையிலேயே ஓய்வு பெற வேண்டும் என்றும், இல்லை அவர் இன்னும் சிறிது காலம் அணிக்கு பங்களிப்பு அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, தோனி ஓய்வு பெறுவதையே அவரின் பெற்றோர் விரும்புவதாக கூறியிருந்தார். 2022-ம் ஆண்டு வரை வணிக ரீதியான ஒப்பந்தங்களில் தோனி கையெழுத்திட்டு இருப்பதால், அதுவரை அவர் ஓய்வு பெறும் திட்டம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

கம்பீர் கருத்து
இந்நிலையில், தோனி ஓய்வு பற்றி கவுதம் கம்பீர் கூறியிருக்கும் கருத்துகள் கிரிக்கெட் உலகை அதிர வைத்திருக்கின்றன. அவர் கூறியிருப்பதாவது: கிரிக்கெட்டில் எதிர் காலம் என்பது ரொம்ப முக்கியம். தோனி கேப்டனாக இருந்த போது எதிகாலம் பற்றி அதிகம் யோசித்தார்.

தோனி சொன்னது
அன்றைய சமயத்தில் ஆஸ்திரேலியாவில் தோனி கூறியது இன்னும் எங்களின் நினைவில் உள்ளது. அதாவது நான், சச்சின், சேவாக், ஆகியோர் காமென்வெல்த் தொடரில் விளையாட முடியாது. அங்குள்ள மைதானங்கள் பெரியது என்பதால், இளம் வீரர்களே சரியாக இருப்பார்கள் என்று கூறினார்.

உணர்ச்சிகளுக்கு இடம்
ஆகவே, நடைமுறைக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர இங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை. புள்ளி விபரங்களை எடுத்து பார்த்தால், தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறலாம். ஆனால் வெறும் புள்ளி விபரங்களை வைத்து கொண்டு, தோனி மட்டும் சிறந்த கேப்டன், மற்றவர்கள் திறமையற்றவர்கள் என்று கூறுவது சரியானது அல்ல.

கங்குலிதான் பெஸ்ட்
தோனியை விட திறமையான கேப்டன்களும் உள்ளனர். முன்னாள் கேப்டனான கங்குலி மிகச்சிறந்த கேப்டன். அவர் தலைமையில் தான், அயல்நாடுகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். கோலி தலைமையில், ஒருநாள் இன்னிங்சை, தென் ஆப்ரிக்காவிலும் மற்றும் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணிலும் கைப்பற்றியுள்ளது.

அணிக்கும் சொந்தம்
தோனி உலகக் கோப்பையை பெற்று கொடுத்துள்ளார் தான். அதற்காக தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது. வெற்றியும், தோல்வியும் கேப்டனை மட்டுமே சாராது. அது ஒட்டுமொத்த அணிக்கும் சொந்தம். அதே போல், கும்ப்ளே, டிராவிட்டும் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி இருக்கின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications