பஜ்ஜி திருமண அழைப்பிதழை பார்த்தீங்களா?: பார்த்தால் அசந்து போவீங்க போங்க
டெல்லி: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண அழைப்பிதழ் மிகவும் பிரமாண்டமாக உள்ளது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை காதலித்து வந்தார். அவர்கள் வரும் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அவர்களின் திருமணம் 5 நாட்கள் திருவிழா போன்று நடக்க உள்ளது.
இந்நிலையில் திருமண அழைப்பிதழின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அழைப்பிதழே பார்க்க அம்சமாக அழகாக உள்ளது. அழைப்பிதழை பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளரான ஏடி சிங் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார்.
அழைப்பிதழில் தங்க நிற தகட்டில் ஹர்பஜன் மற்றும் கீதாவின் பெயர்களின் முதல் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது. பார்க்க பெட்டி போன்று இருக்கும் அந்த அழைப்பிதழில் திருமணத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி கார்டும் உள்ளது.
ஹர்பஜன் சிங் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாட தர்மசாலாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications