Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெரியுமா சேதி?... கோஹ்லிக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருக்காங்களாம்.. பாகிஸ்தான் பெண்கள் அணியில்!!!

டெல்லி: பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியில், விராத் கோஹ்லிக்கு ஏகப்பட்ட ரசிகைககள் உள்ளனராம். இந்த ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார் கேப்டன் சனா மிர்.

தனக்கு கேப்டன் டோணியைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் கூட, விராத் கோஹ்லிக்குத்தான் அதிக அளவில் ரசிகைகள் உள்ளதாக சனா மிர் கூறியுள்ளார்.

கோஹ்லி சிறப்பாக விளையாடி வருவதாகவும், கேப்டன் பொறுப்பில் அவர் பக்குவப்பட்டு வருவதாகவும் சனா மிர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சனா மிர் கொடுத்துள்ள ஒரு பேட்டியிலிருந்து:

கோஹ்லி - டோணி

கோஹ்லி - டோணி

இந்திய அணி குறித்து எங்களது அணியில் பேச்சு வந்தால் அதில் நிச்சயம் டோணி, கோஹ்லி குறித்து பேச்சு வராமல் இருக்கவே இருக்காது.

எனக்கு டோணியைப் பிடிக்கும்

எனக்கு டோணியைப் பிடிக்கும்

தனிப்பட்ட முறையில் எனக்கு டோணியைப் பிடிக்கும். அவர் ஒரு அருமையான கேப்டன். இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். சிறந்த தலைவர்.

சிறந்த அணியாக மாற்றியவர்

சிறந்த அணியாக மாற்றியவர்

இந்திய அணியை ஜூனியர்கள் நிரம்பிய அணியாக வழி நடத்த ஆரம்பித்து இன்று அனுபவம் வாய்ந்த அணியாகவும், சிறந்த அணியாகவும் அவர் மாற்றியுள்ளார்.

கோஹ்லி ஸ்பெஷல்

கோஹ்லி ஸ்பெஷல்

என்னதான் நான் டோணியைப் பாராட்டினாலும் எனது அணியில் கோஹ்லிக்குத்தான் ரசிகைகள் அதிகம். அவர் பலருக்கு ஸ்பெஷலும் கூட என்றார் சனா மிர்.

Story first published: Monday, March 14, 2016, 13:00 [IST]
Other articles published on Mar 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+