இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால்...? ராகுல் டிராவிட் இடத்திற்கு ஆப்பு.. குறி வைக்கும் பாண்டிங்
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இடத்திற்கு ரிக்கி பாண்டிங் குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
விராட் கோலியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தாம் இருந்தால் என்ன செய்வேன் என்று ரிக்கி பாண்டிங் அளித்துள்ள பேட்டியை தற்போது காண்போம்.

விராட் கோலியின் இடம்
விராட் கோலி அணியின் ஒரு முக்கியமான வீரர். அவர் தற்போது அணியில் சுதந்திரமாக இருக்க வேண்டும். பயிற்சியாளராக அவருக்கு ஏற்ற சூழலை உருவாக்குவேன். விராட் கோலயை தொடர்ந்து போட்டியில் விளையாட வைத்து, அவருக்கு உத்வேகம் அளிப்பேன். விராட் கோலியின் பிளேயிங் லெவனில் உள்ள இடத்தை மாற்றக்கூடாது,

இப்படி தான் பேசுவேன்
அப்படி மாற்றினால் நமது ஃபார்மை பார்த்து அனைவரும் கவலைப்படுகிறார்கள் என்ற நினைப்பு அவருக்கு வரும். அதுவே அவருடைய ஆட்டத்தை கெடுக்கும். நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலியின் இடத்திலே அவரை விளையாட வைப்பேன். இதுதான் உன்னுடைய இடம். இங்கு தான் நீ எங்களுக்கு ரன் அடித்து தர வேண்டும் என்று அவருக்கு கூறிவிடுவேன்.

முதல் 4 வீரர்கள்
என்னைப் பொருத்தவரை விராட் கோலி நம்பர் மூன்றாவது இடத்திலே விளையாட வேண்டும் என்று கூறி அவருடைய இடத்திற்கு உத்திரவாதம் அளிப்பேன். ரோகித் சர்மா, கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக இருக்கும் போது விராட் மூன்றாவது இடத்தில் வைத்திருக்க வேண்டும், ரிஷப் பண்ட் அதிரடியான வீரர். அவர் நான்காவது இடத்தில் தான் விளையாட வேண்டும்.

மிரட்டலான பேட்டிங்
தினேஷ் கார்த்திக் நடந்து முடிந்த ஐபிஎல் தொரில் சிறப்பாக விளையாடினார். அவருடைய அனுபவமும், அதிரடியும் கைக் கொடுக்கும். அதன் பிறகு அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியாவை ஆறாவது இடத்தில் வைத்து விளையாடுங்கள். இதில் சூரியகுமாருக்கு வேறு ஒரு இடத்தை கொடுங்கள். இப்படி இருக்கும் போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிரட்டலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications