For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிக்கிப் பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி.. வர்ணனை செய்த போது நடந்த சம்பவம்.. ரசிகர்கள் சோகம்!

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் கேப்டன் ரிக்கிப்பாண்டிங். ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த ரிக்கி பாண்டிங், அடுத்ததாக வர்ணனையாளர் அவதாரம் எடுத்தார். தற்போது முக்கிய போட்டிகள் அனைத்திலும் பாண்டிங்கின் கமெண்ட்டேட்டரி இல்லாமல் இருக்காது.

விராட் கோலி குறித்து பாண்டிங் சொன்ன கணிப்பு.. ரிஷப் பண்டை வைத்து சர்ப்ரைஸ் ? ரிக்கி பாண்டிங் கருத்துவிராட் கோலி குறித்து பாண்டிங் சொன்ன கணிப்பு.. ரிஷப் பண்டை வைத்து சர்ப்ரைஸ் ? ரிக்கி பாண்டிங் கருத்து

சோக சம்பவம்

சோக சம்பவம்

இந்நிலையில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது பாண்டிங்கிற்கு விபரீத சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று ரிக்கிப் பாண்டிங் 7 ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட ரிக்கிப் பாண்டிங், அறையிலேயே தடுமாறியுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இன்னும் உடல்நிலை குறித்து முதற்கட்ட தகவல் கூட வெளியாகததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

துரத்தும் நெஞ்சு வலி

துரத்தும் நெஞ்சு வலி

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களை நெஞ்சு வலி என்பது துரத்தி வருகிறது. இந்தாண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகிய இருவரும் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தனர். டீன் ஜோன்ஸும் கடந்த செப்டம்பர் மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

அட்டகாச ரெக்கார்ட்

அட்டகாச ரெக்கார்ட்

இதுகுறித்து பேசியுள்ள சேனல் 7 அதிகாரி ஒருவர், ரிக்கிப்பாண்டிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, அவர் இந்த தொடரில் இனியும் வர்ணனை செய்வாரா என்பது சந்தேகம் தான் எனக்கூறினார். ரிக்கிப் பாண்டிங் இதுவரை 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,378 ரன்களை அடித்துள்ளார். இதே போல 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ரன்களும் விளாசியுள்ளார். இதில் 30 சதங்களும், 82 அரைசதங்களும் அடங்கும்.

Story first published: Friday, December 2, 2022, 16:47 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
Ex Australian Captain Ricky Ponting admitted in hospital after Got Heart scare during Australia vs west indies test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X