Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை தவறாக கையாள வேண்டாம்.. கோலியை பார்த்து எதிரணி பயப்படும்.. ரிக்கி பாண்டிங் அட்வைஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

விராட் கோலியை எப்படி கையாள வேண்டும். அவரது ஃபார்மை மீட்டு வர என்ன செய்ய வேண்டும் போன்ற கருத்தை அவர் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நிலை குறித்து ஐசிசி தளத்துக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

கடினமான சூழல்

கடினமான சூழல்

விராட் கோலிக்கு இது ஒரு கடினமான காலம் என்பதை நான் அறிவேன். அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால் அனைத்து சிறந்த வீரர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படும். பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் சரி இந்த நிலைமையை அவர்கள் கடந்து ஆக வேண்டும். ஆனால் சிறந்த வீரர்கள் கடினமான சூழலில் எப்படி எதிர்கொண்டு மீண்டு வருகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

விராட் கோலி மீது பயம்

விராட் கோலி மீது பயம்

விராட் கோலிக்கும் அது சீக்கிரம் நிகழும் என நம்புகிறேன். வீரராகவும் கேப்டனாகவோ இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். விராட் கோலி இல்லாத அணியை விட, அவர் பிளேயிங் லெவனில் இருக்கும் அணியை பார்த்து தான் நான் அச்சம் கொள்வேன். அது தான் விராட் கோலி ஏற்படுத்தி இருக்கிற தாக்கம்.

விராட் கோலிக்கு கஷ்டம்

விராட் கோலிக்கு கஷ்டம்

உலகக்கோப்பை நடைபெறும் இந்த காலத்தில் விராட் கோலியை அணியை விட்டு நீக்கி வேறு ஒருவரை நீங்கள் கொண்டு வந்தால், மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்புவது கடினமாகும். நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கு அவருடைய நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன். விராட் கோலியின் தற்போது உள்ள சூழலை நான் லேசாக மாற்ற முயற்சி செய்வேன்,

டி 20 உலகக் கோப்பை

டி 20 உலகக் கோப்பை

விராட் கோலி ஃபார்முக்கு வர நான் காத்திருப்பேன். விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் ஃபார்மில் இல்லை என்றால் கூட அவரை விளையாட வைக்க வேண்டும், அப்போதுதான் லீக் சுற்றுகளில் விராட் கோலி ஓரளவுக்கு உத்வேகத்தை பெற்று நாக் அவுட் சுற்றுகளில் எரிமலை போல் வெடித்து அணிக்காக சிறந்து விளையாடுவார்.

Story first published: Wednesday, July 20, 2022, 20:05 [IST]
Other articles published on Jul 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+