Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கிரிக்கெட் என்ற பெயரையே சொல்லக்கூடாது”.. ரிக்கி பாண்டிங் அதிரடி பேச்சு.. ஐசிசி-க்கு சொன்ன யோசனை

நியூயார்க்: அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை மக்களிடம் வேகமாக கொண்டு சேர்க்க விரும்பினால், கிரிக்கெட் என்ற பெயரை தவிர்த்துவிட்டு வெறும் டி20 என்று மட்டுமே அழைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடி யோசனை ஒன்றை கூறி இருக்கிறார்.

அமெரிக்க விளையாட்டு சந்தையைக் கைப்பற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிக்கி பாண்டிங் ஒரு முக்கிய யோசனையை முன்வைத்துள்ளார். "அமெரிக்காவில் இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சென்று பிரபலப்படுத்த நினைத்தால், கிரிக்கெட் என்ற பெயரை ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டும்" என அவர் கூறினார். "இந்த விளையாட்டை முற்றிலும் டி20 என்ற புதிய அடையாளத்துடன் மட்டுமே விளம்பரப்படுத்த வேண்டும்" என்று பாண்டிங் தெரிவித்தார்.

Ricky Ponting Advises Renaming Cricket to T20 to Boost Popularity in US Market

இதுகுறித்து மேலும் பேசிய பாண்டிங், "பாரம்பரியம் இல்லாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் என்ற பெயரை கேட்டாலே அது 5 நாட்கள் இழுத்தடிக்கும் போட்டி என்று நினைத்துக் கொள்கிறார்கள். எனவே அமெரிக்கர்களுக்கு புரிய வைக்க அந்நாட்டின் பிரபல பேஸ்பால் ஆட்டத்துடன் இதை ஒப்பிட வேண்டும். பேஸ்பால் போட்டியில் ஒரு ஆட்டத்தில் ஒரு ஹோம் ரன் அடிப்பதே மிகக் கடினம். ஆனால் 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டத்திற்கு 15 சிக்சர்கள் பறக்கின்றன என்பதை இங்குள்ள சிறுவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார்.

விளையாட்டு வர்த்தகத்தில் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அங்கு பேஸ்பால், கூடைப்பந்து மற்றும் அமெரிக்க கால்பந்து விளையாட்டுகளுக்கே மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. தற்போது வரை அங்கு குடியேறிய ஆசிய, ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க மக்களே கிரிக்கெட்டை அதிகம் பார்க்கின்றனர்.

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

இதை மாற்றி அமெரிக்க மக்களையும் ஈர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2024ல் அங்கு டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தியது. மேலும் அங்குள்ள மேஜர் லீக் தொடரை நடத்தி வருவதுடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பிரத்யேக மைதானங்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கி வருகிறது. அமெரிக்க மேஜர் லீக் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் தலைமை பயிற்சியாளராக பாண்டிங் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு.. பாகிஸ்தான் அணியில் இருந்து 3 மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட பின்னணி!

Also Read

இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு.. பாகிஸ்தான் அணியில் இருந்து 3 மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட பின்னணி!
Story first published: Saturday, September 5, 2026, 11:42 [IST]
Other articles published on Sep 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+