Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி இவர் தான் இந்தியாவின் புதிய பயிற்சியாளர்? அடையாளம் காட்டும் தாதா கங்குலி

டெல்லி:இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங் சரியான நபர் என்று தாதா கங்குலி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தற்போது நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி பெயரை மாற்றி டெல்லி கேப்பிடல்ஸ் என்ற புதுப்பொலிவுடன் களமிறங்கியது. பெயர் மாற்றம் அந்த அணிக்கு மாற்றத்தை கொடுத்துள்ளது.

தற்போது புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தை பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பாண்டிங் காரணம்

பாண்டிங் காரணம்

அதற்கு டெல்லி அணியில் உள்ள இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரபாடா, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர். அதில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் பங்களிப்பு பெரிய அளவாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

பதவிக்காலம் முடிகிறது

பதவிக்காலம் முடிகிறது

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

புதிய கோச் பாண்டிங்?

புதிய கோச் பாண்டிங்?

உலக கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப் படலாம் என்று தகவல்கள் உலா வருகின்றன. அது தொடர்பான கருத்தை தாதா கங்குலி வரவேற்றுள்ளார்.

சரியானவர்

சரியானவர்

இதுகுறித்து கங்குலி கூறியதாவது:பாண்டிங் பயிற்சியாளராவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஓராண்டில் வீட்டை விட்டு கிட்டத்தட்ட 9 மாதங்கள் வரை பிரிந்திருக்கும் முடிவு அவருடையது . ஆனால் அந்த பொறுப்பு அவர் சரியான நபர் என்பதில் மாற்று கருத்து எதுவுமில்லை என்றார்.

தவான் சொன்னது என்ன?

தவான் சொன்னது என்ன?

டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது பாண்டிங் மற்றும் கங்குலி தலைமையில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்கிறது என்று தவான் ஏற்கனவே கூறி இருந்தார். பாண்டிங் டெல்லி அணியின் பயிற்சியாளராகவும், கங்குலி ஆலோசகராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 1, 2019, 21:07 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+