Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருப்பு மாதிரி வலிமையா இருக்கோம்... கண்டிப்பா வெற்றி எங்களுக்குத்தான்... பாண்டிங் உறுதி

துபாய் : ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் நெருப்பு போன்ற உறுதியை கொண்டுள்ளதாகவும் அதனால் வெற்றி தங்களுக்குத்தான் என்றும் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிப்போட்டியில் தாங்கள் செய்த தவறுகளை சரிசெய்துக் கொண்டாலே எளிதாக வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியுற்றது. பின்னர் 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

3 முறை மும்பையிடம் டெல்லி அணி தோல்வி

3 முறை மும்பையிடம் டெல்லி அணி தோல்வி

இந்த தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 3 முறை டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் அவர்கள் தோல்வியே கண்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதையடுத்து வெற்றிக்கான தீவிரம் அவர்களிடம் அதிகமாக உள்ளது.

வெற்றி டெல்லி அணிக்குத்தான்

வெற்றி டெல்லி அணிக்குத்தான்

இந்நிலையில் தங்களின் வீரர்கள் நெருப்பு போன்ற உறுதியுடன் உள்ளதாகவும் அதனால் இன்றைய இறுதிப்போட்டியில் கண்டிப்பாக தங்களது அணி வெற்றி பெறும் என்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்

தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்

கடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் செய்த தவறுகளை திருத்தி கொண்டாலே இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மும்பை அணி எந்த அணியுடன் இந்த போட்டியில் விளையாடக்கூடாது என்று யோசித்தால், அது கண்டிப்பாக டெல்லி கேபிடல்சாக தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Story first published: Tuesday, November 10, 2020, 15:06 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+