Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னர் முதுகில் குத்திய ரிக்கி பாண்டிங்.. கூடவே இருந்து இப்படி சொல்லிட்டாரு.. பதிலடி தருவாரா?

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

டேவிட் வார்னரின் குரு என்று அழைக்கப்படுபவர் ரிக்கி பாண்டிங், தற்போது டெல்லி அணியில் டேவிட் வார்னர் இடம்பெற்று இருப்பதற்கு முக்கிய காரணம் பாண்டிங் தான்.

இந்த நிலையில் ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டேவிட் வார்னர் குறித்து பேசியதை தற்போது பார்க்கலாம்.

ஓய்வு பெற்றிருக்கனும்

ஓய்வு பெற்றிருக்கனும்

நான் ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றை அளித்தேன். அதில் நான் கூறியது டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் சிறந்த தருணத்தில் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அவர் முடித்துக் கொண்டிருப்பார்.

12 மாதங்கள்

12 மாதங்கள்

சொந்த நாட்டிலும் பிரியாவிடை பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும். அனைத்து வீரர்களும் இதனை தான் விரும்புவார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து டேவிட் வார்னருக்கு மீண்டும் இந்த வாய்ப்பு வராமல் கூட போகலாம். ஏனென்றால் இன்னும் 12 மாதங்கள் அதற்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்து வார்னரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நிச்சயமாக ஆஸ்திரேலியா நிர்வாகம் விளையாட வைக்கும் என கருதுகிறேன்.

இங்கிலாந்தில் வார்னர்

இங்கிலாந்தில் வார்னர்

ஆனால் அது ஒரு பெரிய முடிவாக தான் இருக்கும். ஏனென்றால் இந்தியா வருவதற்கு முன்பே யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஆஸ்திரேலியா அணியிடம் இருந்தது. அதேபோன்ற ஒரு குழப்பம் தற்போது ஆசஸ் தொடருக்கும் வரும். ஏனென்றால் இங்கிலாந்தில் டேவிட் வார்னரின் ரெக்கார்டு அந்த அளவுக்கு ஒன்றும் பலமாக இல்லை. ஆனால் டேவிட் வார்னருக்குஇது முடிவுரையாக இருக்காது.

ஒரு போட்டியில் வாய்ப்பு

ஒரு போட்டியில் வாய்ப்பு

நிச்சயம் அணி நிர்வாகம் அவரை ஒரு போட்டியில் ஆவது விளையாட வைக்கும். அதில் அவர் நன்றாக விளையாடினால் ஆசஸ் தொடரில் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னரின் சராசரி வெறும் 26 தான் உள்ளதால் அவரை அணியில் சேர்ப்பது சிரமம் என்று கிரிக்கெட் விமர்சனங்களும் கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, March 5, 2023, 23:08 [IST]
Other articles published on Mar 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+