விராட் கோலி குறித்து பாண்டிங் சொன்ன கணிப்பு.. ரிஷப் பண்டை வைத்து சர்ப்ரைஸ் ? ரிக்கி பாண்டிங் கருத்து
மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை வென்றால் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நிறைவு செய்யும்.
மேலும் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதோடு இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளும்.
ஆனால் இந்திய அணி செய்த ஒரு நல்ல விஷயம் மற்றும் செய்யத் தவறிய ஒரு விஷயத்தை குறித்து ஆஸ்திரேலியா அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

ஆச்சரியம்
அதில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரிஷப் பண்ட் போன்ற ஆட்டத்தை வென்று தரும் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் போன்ற ஒரு நபர் வித்தியாசமான சூழலில் நடு வரிசையில் தேவைப்படலாம். அக்சர் பட்டேல் பேட்டி ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் இந்திய அணி அவரது பேட்டிங்கை ஆதரித்து , அவரை நடு வரிசையில் களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறி இருக்கிறார்.

கடினமான விஷயம்
அப்படி என்றால் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுக்காக ரிஷப் பண்டை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான விஷயம். இந்திய அணி எது சரியான பிளேயிங் என்று தெரியாமலேயே ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டனர். அதற்குக் காரணம் ஆஸ்திரேலியாவில் நாம் எந்த மாதிரி ஆடுகளத்தில் விளையாட போகிறோம் என்று அவர்களுக்கு தெரிந்திருக்காது.

வாய்ப்பு கொடுக்கலாம்
ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாடி இருக்கிறார் என்று நம் அனைவருக்குமே தெரியும். ரிஷப் பண்டை ஏதாவது ஒரு பெரிய ஆட்டத்தில் இந்திய அணி சேர்க்கும் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்திய அணியின் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பந்த் என்பதால் இந்திய அணி வாய்ப்பு கொடுக்கலாம் என பாண்டிங் கூறியுள்ளார்.

பாராட்டு
விராட் கோலி குறித்து பாராட்டி பேசி உள்ள ரிக்கி பாண்டிங், களத்தில் கடுமையாக உழைப்பது முதல் நல்ல உணவுகளை சாப்பிடுவதில் இருந்து அனைத்திலும் தன்னை விராட் கோலி பார்த்து கொள்கிறார். ஆனால் சில காலம்வரை விராட் கோலிக்கு அது பயனை தந்தது. பிறகு மீண்டும் அவர் சிறந்த வீரராக மாற என்ன செய்ய வேண்டும் என்று வெளியே தேடி அதற்கான வழியை கண்டுபிடித்தார்.

பாண்டிங் கணிப்பு
விராட் கோலிக்கு தொடர்ந்து ஆதரவளித்ததால் அதற்கான பலனை இந்திய அணி தற்போது அறுவடை செய்கிறது. அரை இறுதி அல்லது இறுதி ஆட்டத்தில் விராட் கோலி நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். விராட் கோலி தன்னுடைய 34-வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ரிக்கி பாண்டிங் பேச்சு அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications