Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டாம்.. தோல்வி அடைவீர்கள்.. பாண்டிங் கிண்டல்

மும்பை :இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய வீரர்களும் தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளரிடம் பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய ஆடுகளங்கள் குறித்து கிண்டல் செய்தார்.

இது குறித்து பேசிய அவர் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலம் ஒட்டுமொத்த தொடரில் தற்போது இக்கட்டான நிலையில் இந்தியா இருக்கிறது.

இந்தியாவின் எண்ணம்

இந்தியாவின் எண்ணம்

இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் கடைசி டெஸ்ட் போட்டிக்கு தாங்கள் நினைத்தபடி ஆடுகளத்தை அமைத்துக் கொண்டிருக்கலாம். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பயிற்சி செய்யும் வகையில் இங்கிலாந்தில் கிடைக்கும் ஆடுகளத்தை கூட இந்தியா தயார்படுத்தி கொண்டு இருக்கலாம்.

குழப்பம்

குழப்பம்

ஆனால் தற்போது தொடரை வெல்ல வேண்டிய நிலையில், இந்திய அணி இருக்கிறது. இதனால் இந்திய அணி அப்படி ஒரு ஆடுகளத்தை அமைக்கவே அமைக்காது. இப்படி ஒரு நிலையை ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் செய்திருந்தால் அது இந்திய அணி வீரர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கும். ஆடுகளப் பராமரிப்பாளர்கள் எப்படி தயார் செய்வார்கள் நாம் எப்படி தயார் ஆக வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

விளையாட தெரியாது

விளையாட தெரியாது

இது இந்தியாவில் முதல்முறையாக நடக்கவில்லை.எப்போதெல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து திரும்பும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதோ, அப்போதெல்லாம் அது இந்தியாவையே பாதிப்படைய செய்திருக்கிறது. ஸ்டீபன் ஓ கேப் போன்ற சுழல் பங்குவீச்சாளர்கள் இந்திய வீரர்கள் விக்கெட்டை எல்லாம் அதிகளவில் எடுத்திருக்கிறார்.

கிண்டல்

கிண்டல்

எனவே கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்த வகையில் ஆடுகளம் அமைக்கும் என்பதை காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கடைசி டெஸ்டில் நின்றால் தான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். எனக்கு தெரிந்து அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து இப்போது யோசிக்க கூடாது. அவர்களுடைய கவனம் எல்லாம் அடுத்த ஐந்து நாட்கள் குறித்து தான் இருக்க வேண்டும் என பாண்டிங் கூறியுள்ளார். இந்திய அணி சுழல் பந்துவீச்சு ஆடுகளத்தை அமைத்தால் இந்திய வீரர்களுக்கு விளையாட தெரியாது என்பதை மறைமுகமாக ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார்.

Story first published: Wednesday, March 8, 2023, 10:34 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+