பாண்டிங்-ஐ பிரமிப்பில் ஆழ்த்திய இந்திய வீரர்.. இந்தியாவின் மிகப்பெரிய பலமாம்??.. அப்படி என்ன ஸ்பெஷல்

சிட்னி: ஏ.பி.டிவில்லியர்ஸை போலவே இந்தியாவில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருவதாக முன்னாள் விரர் ரிக்கிப்பாண்டிங் பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஎஸ்கேவில் ஜடேஜாவுக்கு மாற்று யார்? 4 வீரர்களை குறிவைக்கும் தோனி.. என்ன பிளான் ?சிஎஸ்கேவில் ஜடேஜாவுக்கு மாற்று யார்? 4 வீரர்களை குறிவைக்கும் தோனி.. என்ன பிளான் ?

சூர்யகுமார் யாதவ் அதிரடி

சூர்யகுமார் யாதவ் அதிரடி

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என நட்சத்திர வீரர்கள் ஃபுல் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு போட்டிகளில் சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.

பாண்டிங் புகழாரம்

பாண்டிங் புகழாரம்

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் தான் இந்திய அணியை காப்பாற்றுவார் என்பது போல ரிக்கிப்பாண்டிங் பேசியுள்ளார். அதில், டிவில்லியர்ஸை போலவே தான் சூர்யகுமார் யாதவும். ஏபி டிவிலியர்ஸ் எப்படி அனைத்து பக்கங்களிலும் பந்துகளிலும் அதிரடி காட்டுவாரோ, அதேபோல தற்போது சூர்யகுமார் யாதவும் 360 டிகிரியில் விளையாடி வருகிறார்.

பிரமிப்படைந்தேன்

பிரமிப்படைந்தேன்

சூர்யகுமார் யாதவின் சில ஷாட்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரின் பேட்டிங் ஸ்டைல் நெருக்கடி அளிக்கும் வகையில் உள்ளதால், பவுலர்கள் குழப்பமடைகின்றனர். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்தையும் அதிரடியாக எதிர்கொண்டு ஆடும் திறமை அவரிடம் உள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்தியாவுக்காக ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பையிலும் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதே போல இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் இவருக்கு 4வது இடத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என ரிக்கிப்பாண்டிங் பெருமையுடன் கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ricky ponting praises suryakumar yadav ( சூர்யகுமார் யாதவ் குறித்து ரிக்கி பாண்டிங் புகழாரம் ) சூர்யகுமார் யாதவின் பேட்டிங் பிரமிப்பில் ஆழ்த்தியதாக ரிக்கி பாண்டிங் புகழ்ந்துள்ளார்.
Story first published: Tuesday, August 16, 2022, 16:21 [IST]
Other articles published on Aug 16, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X