Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் மாதிரி சிறப்பா விளையாடறாரு... அணியை சிறப்பா வழிநடத்துறாரு.. பாண்டிங் பாராட்டு

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டாவது இன்னிங்சில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியை கேப்டன் ரஹானே சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் கேப்டன் போல சிறப்பான பேட்டிங்கை அளித்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கோச் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் முதலில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

இதையடுத்து தற்போது அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு சுருண்ட நிலையில், முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 326 ரன்களை குவித்தது.

2வது இன்னிங்சில் ஆஸி. திணறல்

2வது இன்னிங்சில் ஆஸி. திணறல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது. இந்நிலையில் கேப்டன் ரஹானே கடந்த பகலிரவு போட்டியின் மோசமான தோல்வியிலிருந்து மீளும் வகையில் அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கோச் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

அவர் ஒரு சிறப்பான கேப்டனாக சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் பாண்டிங் சுட்டிக் காட்டியுள்ளார். இதன்மூலம் தனது நாட்டையும் தனது அணியையும் மீண்டும் பார்மிற்கு கொண்டு வர அவர் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 28, 2020, 12:29 [IST]
Other articles published on Dec 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+