ஆஸ்திரேலிய டி-20 அணியின் உதவி பயிற்சியாளரானார் ரிக்கி பான்டிங்
சிட்னி: இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் தற்காலிக உதவி பயிற்சியாளர் ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோருடன் இணைந்து பான்டிங் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி 20 தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. ரிக்கி பான்டிங், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இரு தொடர்களுக்கு இருந்தவர் பான்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 2007 மற்றும் 2009 ஆகிய இரு ஐசிசி டி20 உலகக் கோப்பைத்தொடரில் செயல்பட்டுள்ளார்.
தனது நியமனம் குறித்து பான்டிங் கூறுகையில், நல்ல அருமையான திறமைகள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளன. அதை சிறந்த முறையில் வெளிக் கொணர உதவுவேன் என்றார் பான்டிங்.


Click it and Unblock the Notifications