Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயா பாண்டிங்.. என்னங்க இதெல்லாம்.. ஜோசியராய் மாறிய தருணம்.. ஆஸி, டெஸ்ட் தொடரில் சுவாரஸ்ய சம்பவம்!

காப்பா: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது முன்னாள் வீரர் ரிக்கிப்பாண்டிங் செய்த விஷயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது.

இதில் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காப்பா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அட்டாகச பவுலிங்கால் தென்னாப்பிரிக்காவை குறைந்த ரன்களுக்குள் சுருட்டியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

தொடக்க வீரர்கள் டீன் எல்கர் 3, சரெல் எர்வே 10 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, பின்னர் வந்த வாண்டர் டுசன் 5 ரன்களுக்கு நடையை கட்டினார். அதிகபட்சமாக தெம்பா பவுமா (38) மற்றும் வெர்ரேய்ன் 64 மட்டுமே 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா குறித்து ரிக்கிப் பாண்டிங் கூறியது அப்படியே நடந்துள்ளது. அதாவது 125 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்த போது, களமிறங்கிய மார்கோ ஜான்சென் ரன் அடிக்கவே திணறிக்கொண்டிருந்தார். மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டே இருந்ததால் 18 பந்துகளை சந்தித்தும் வெறும் 3 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

பாண்டிங்கின் கணிப்பு

பாண்டிங்கின் கணிப்பு

அப்போது கமெண்டேட்டரியில் இருந்து பேசிய ரிக்கிப்பாண்டிங், ஸ்டார்க் பவுலிங்கால் பெரும் அழுத்தத்தில் இருக்கும் ஜான்சென், ஸ்பின்னர் நாதன் லயான் வீசும் ஓவரை குறிவைத்து அடிப்பார். ஆனால் அது கேட்ச்சாக மாறப்போகிறது எனக்கூறினார். ஆனால் அதிசயமாக ரிக்கிப்பாண்டிங் கூறிய முறையிலே தான் ஜான்சென் விக்கெட்டை பறிகொடுத்தார்.

விக்கெட் எடுத்த முறை

விக்கெட் எடுத்த முறை

நாதன் லியான் வீசிய குட் லெந்த் பந்தை இறங்கி வந்து அடிக்க நினைத்தார். ஆனால் பந்து டாப் எட்ஜில் பட்டு நேராக ஷார்ட் மிட் விக்கெட்டின் தலைக்கு மேல் சென்றது. அங்கு நின்றிருந்த கேமரூன் கிரீன் அழகாக அதை பிடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிக்கிப்பாண்டிங் எப்படி இதை கணித்தார் என ஆச்சரியத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Story first published: Saturday, December 17, 2022, 16:21 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+