Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் யார் வெற்றி பெறுவார்? காரணத்துடன் அடித்துக்கூறும் ரிக்கிப் பாண்டிங்.. ரசிகர்கள் குஷி

சிட்னி: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதலில் யார் வெற்றி பெறுவார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ளது.

இதில் முக்கிய அணிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

இரு அணிகளும் கடைசியாக கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மோதிய போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் காத்துள்ளனர். இதற்கேற்றார் போல இரு அணிகளும் ஆசிய கோப்பையில் 3 முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

லீக் சுற்றில் இரு அணிகளும் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி மோதும், இதன்பின்னர் சூப்பர் 4 சுற்றுக்கு இரு அணிகளும் தகுதிப்பெற்றால் செப்டம்பர் 5ம் தேதி மோதுகிறது. இதன் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றால் செப்டம்பர் 11ம் தேதி மோதலாம். எனவே இந்த மோதலில் யார் வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பாண்டிங் கணிப்பு

பாண்டிங் கணிப்பு

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் பேசியுள்ளார். அதில், இந்திய அணியை பொறுத்தவரை கடந்த காலங்களை பார்ப்பது பயனுள்ளதாக இருக்காது. ஏனென்றால் ஒவ்வொரு முறை டி20 உலகக்கோப்பை வந்தாலும், அதில் முதன்மை அணியாக எனக்கு தெரிவது இந்தியா தான். அந்த அணியின் பலம் மற்ற அணிகளை விட சிறந்தது ஆகும். எனவே ஆசிய கோப்பையை இந்தியா தான் வெல்லும்.

பாகிஸ்தானுடனான மோதல்

பாகிஸ்தானுடனான மோதல்

இந்தியா - பாகிஸ்தான் மோதலிலும் நான் இந்தியாவின் பக்கம் தான் நிற்கிறேன். பாகிஸ்தான் ஒரு சிறந்த அணி தான், சூப்பர் ஸ்டார் போன்ற வீரர்களை வைத்துள்ளது. ஆனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை விட இந்தியா தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு என நினைக்கிறேன் என ரிக்கிப் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, August 13, 2022, 12:21 [IST]
Other articles published on Aug 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+