Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் போன்ற வீரருக்கே அணியில் இடமில்லை என்றால், இந்திய அணியின் பலத்தை பாருங்க- பாண்டிங்

மும்பை: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தபோது, கில் பெயர் இல்லை. அவருக்குப் பதிலாக ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் டி20 அணிக்குத் திரும்பினர்.

கில் அணியில் இல்லாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர், "என்னால் நம்ப முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரது சமீபத்திய ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது தெரியும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் பார்த்திருந்தபோது, அவர் அனைவரையும் விட மிகச் சிறப்பாக பேட் செய்தார்."

T20 World cup Shubman gill Ricky Ponting

"இது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தைக் காட்டுகிறது. ஷுப்மன் கில் போன்ற ஒரு சிறந்த வீரர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது, அங்கு எவ்வளவு நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது".

"நாடு முழுவதும் இந்தியாவின் ஆழம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு ஐசிசி போட்டியிலும், இந்தியா அணியை முதல்நிலைக்கு அருகே வைக்க வேண்டும், ஏனெனில் தேர்வு செய்ய பல சிறந்த வீரர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் டி20 துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கில், மோசமான ஆட்டங்களால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2025 ஆம் ஆண்டு சுப்மன் கில் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 291 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 47 ரன்கள் ஆகும் அவருடைய சராசரி 24 என்ற குறைந்த அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 137 என்ற அளவில் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கில் இந்திய அணிக்காக 869 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 28 என்ற அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 138 என்ற அளவிலும் உள்ளது. தற்போது டி20 கிரிக்கெட் மாறி வருகிறது. இதனால் தொடக்க வீரர்களில் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாற்றத்திற்கு ஏற்ப வகையில் கில் விளையாடவில்லை என்பதால் தான் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இதற்கு விளக்கம் அளித்த தேர்வு குழு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தொடக்க வீரராக இருந்தால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டரை கீழ் வரிசையில் சேர்க்க முடியும் என்பதற்காக தான் கில் நீக்கப்பட்டதாக கூறியிருக்கிறது.

Story first published: Monday, January 5, 2026, 12:34 [IST]
Other articles published on Jan 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+