Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பையில் இனி இந்த அணியை வீழ்த்துவது மிகவும் கடினம்.. எச்சரிக்கை கொடுத்த ரிக்கி பாண்டிங்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இரண்டு வாரங்களை கடந்து விட்டது. இன்னும் ஐந்து வாரங்கள் எஞ்சி இருக்கிறது. தற்போது பெரும்பாலான அணிகள் மூன்று போட்டிகளை விளையாடிவிட்டது.

இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வென்றிருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் தான் வென்றிருக்கிறது.

Ricky Ponting says India is the team is difficult to beat in icc world cup 2023

ஆஸ்திரேலிய அணி அதே நிலைமையில் தான் இருக்கிறது. இந்த நிலையில் உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். அதில், ரோகித் சர்மா தற்போது நிம்மதியாக இருக்கிறார். ரோஹித் சர்மா எது செய்கிறாரோ அது அவருக்கு தற்போது வெற்றியை தருகிறது. இதை அவருடைய விளையாடும் ஸ்டைலில் இருந்து பார்த்துவிடலாம். அவர் அடிக்கும் ஷார்ட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது.

ஆடுகளத்திற்கு உள்ளேயும் ஆடுகளத்திற்கு வெளியேயும் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதிலே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று தெரிகிறது. அதேசமயம் நாம் மிகவும் அமைதியாக இருந்து கொண்டு நமக்கு நெருக்கடியே ஏற்படாது என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால் நிச்சயம் அதுவும் இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்த தொடரின் மகிமையே அதுதான்.

எனினும் ரோகித் சர்மா இந்த நெருக்கடியை சமாளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாகவும் வீரராகவும் ரோகித் சர்மா சிறப்பாக இந்த தொடரில் செயல்பட்டு வருகிறார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் இதை தான் கூறி வருகிறேன். இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்த மற்ற அணிகள் மிகவும் சிரமப்படுவார்கள்.

ஏனென்றால் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேக பந்துவீச்சு, பேட்டிங், சுழற் பந்து வீச்சு, முன்வரிசை, நடுவரிசை என அனைத்துமே சிறப்பான நிலையில் இருக்கிறது. இதனால் இந்தியாவை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். அதே சமையம், இனி அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியை அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

Story first published: Tuesday, October 17, 2023, 16:27 [IST]
Other articles published on Oct 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+