நீங்க எதுக்கு கேப்டனா இருக்கீங்க? ஜோ ரூட்டை வெளுத்து வாங்கிய ரிக்கி பாண்டிங்..!!
அடிலெய்ட்: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற 2வது டெஸ்டிலும் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டும் மோசமாக உள்ளதால், இந்த தொடரை 5க்கு0 என்ற கணக்கில் அந்த அணி தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜோ ரூட் புகார்
இதனிடையே, இங்கிலாந்து அணி தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சாளர்கள் செய்த தவறால் தான், நாங்கள் தோற்றுவிட்டோம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். பிரிஸ்பேனில் செய்த அதே தவறை, அடிலெய்டிலும் எங்களது பந்துவீச்சாளர்கள் செய்துவிட்டனர். பந்தை இன்னும் ஃபுல் லெங்த்தில் வீச வேண்டும், ஆனால் அதனை எங்கள் வீரர்கள் செய்யவில்லை என்று விரக்தியில் ஜோ ரூட் கூறினார்.

ரிக்கி பாண்டிங் கேள்வி
ஜோ ரூட்டின் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோ ரூட்டின் இந்த பேச்சை கேட்டதும், அதிர்ச்சியில் இருக்கையை விட்டு விழுந்துவிட்டேன் என்று கூறிய ரிக்கி பாண்டிங், பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை என்றால், அப்போது எதற்கு களத்தில் கேப்டனாக இருக்குறீர்கள் என்று ரிக்கி பாண்டிங் கேள்வி எழுப்பினார்.

பாண்டிங் அறிவுரை
பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால், அவர்களிடம் அப்போதே சென்று பேச வேண்டும் என்று அறிவுறுத்திய ரிக்கி பாண்டிங், பந்துவீச்சாளர்களை உங்களால் வழிநடத்த முடியவில்லை என்றால் நீங்கள் பதவியை விட்டு செல்லுங்கள், இல்லை பந்துவீச்சாளர்களை மாற்றுங்கள் என்று ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார்
Recommended Video

கிண்டல்
பிராட், ஆண்டர்சன் போன்ற அனுபவ வீரர்கள் தங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், பேச்சை கேட்கும் பந்துவீச்சாளர்களை அணியில் கொண்டு வாருங்கள் என்று பாண்டிங் கூறினார். ஜோ ரூட் களத்தில் இல்லாத நேரத்தில் தான் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதாகவும், அவர் களத்திற்கு திரும்பியவுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டதாக ரிக்கி பாண்டிங் கிண்டல் செய்தார்.


Click it and Unblock the Notifications