Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா மீது அப்படி என்ன கோபம்.. உலக கோப்பையில் டாப் 3 வீரர்களை தேர்வு செய்த ரிக்கி பாண்டிங்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் நோக்கி நெருங்கி வருகிறது. இன்னும் கடைசி சுற்றில் லீக் ஆட்டம் தான் நடைபெற உள்ளது. ஏறக்குறைய மூன்று அரை இறுதி அணிகள் எது என்பது குறித்து அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.

நான்காவது இடத்தைப் பிடிக்கப் போகும் அணி எது என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தம்மை கவர்ந்த டாப் 3 வீரர்கள் யார் என்பது குறித்து பாண்டிங் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.

Ricky Ponting snubs India players in his top 3 world cup favourite players

இந்தப் பட்டியலில் அவர் முதலிடத்தை ஆஸ்திரேலியா வீரர் அடம் ஜாம்பாவுக்கு கொடுத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஆடம் ஜாம்பாவை தவிர மற்ற வீரரை முதல் இடத்தில் வைப்பதற்கு மிகவும் கடினம். இந்த தொடரில் அவர்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை.

ஆனால் தற்போது சிறப்பாக விளையாடி 18-19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். நிச்சயம் அவருடைய செயல்பாடு பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இரண்டாவது இடத்தை ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்க வீரர் குயின் டன் டிகாக்கிற்கு கொடுத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் டி காக் நடப்பு உலக கோப்பையில் நான்கு சதம் அடித்திருக்கிறார்.இது அவருடைய கடைசி உலக கோப்பை ஆகும். டி காக் தவிர மற்ற வீரரை தேர்வு செய்வது மிகவும் கடினம்.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்கிற்கு அவர்தான் பலமாக விளங்குகிறார் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டினார். மூன்றாவது இடத்தை ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்கோ யான்சென்னுக்கு கொடுத்து இருக்கிறார். புது பந்தை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கிறார். மேலும் கீழ் வரிசையில் ரன்களை சேர்க்கிறார் என ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சமி போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ஒரு இந்திய வீரர்களை கூட ரிக்கி பாண்டிங் சேர்க்காதது குறிப்பிடத்தக்கது. இதனால் ரிக்கி பாண்டிங் இந்தியா மீது அப்படி உங்களுக்கு என்ன சார் கோபம் என்று இந்திய ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Story first published: Monday, November 6, 2023, 6:20 [IST]
Other articles published on Nov 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+