உங்களை நீங்களே ஏமாற்றாதீங்க..! சீக்கிரம் பழைய படி வாங்க.. விராட் கோலிக்கு பாண்டிங் கொடுத்த அட்வைஸ்
டெல்லி: இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ரிக்கி பாண்டிங் முத்தான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
ரன் மிஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி, தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பழைய படி ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட விராட் கோலியின் சராசரி வெறும் 22 தான். அந்த தொடரில் 3 முறை கோல்டன் டக்கும் ஆகி இருக்கிறார்.

2 ஆண்டுகள் காத்திருப்பு
கடைசியாக அவர் சர்வதேச போட்டியில் சதம் விளாசியது 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான். இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் விராட் கோலி 71வது சதத்தை அடிக்கவில்லை. இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இது போன்ற சூழலை அனைத்து வீரர்களுமே சந்திக்க நேரிடும். விராட் கோலி பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய அளவில் சரிவை சந்தித்தது இல்லை.

உடல் அளவில் சோர்வு
ஐபிஎல் தொடரில் குறுதிய காலத்தில் அதிக சவாலான போட்டியில் விளையாடும் போது உடல் மற்றும் மனது அளவில் சோர்வு ஏற்படும். அதனை விராட் கோலி தான் இது மனதளவிலான பிரச்சினையா இல்லை கிரிக்கெட்டில் உள்ள குறையா என்பதை கண்டறிந்து, நிவர்த்தி செய்ய வேண்டும். விராட் கோலி மீது அதீத நம்பிக்கை உள்ளது. அவர் விரைவாக கண்டறிந்து மீண்டு வருவார்.

ஏமாற்றி கொள்ளாதீர்கள்
என் கிரிக்கெட் அனுபவத்திலிருந்து ஒன்றை மட்டும் என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும். நான் சோர்வாக இல்லை, உடல் அளவில் மனது அளவில் நன்றாக இருக்கிறேன் என்று ஒவ்வொரு வீரர்களும் அவர்களுக்கு அவர்களே கூறிவிட்டு ஏமாற்றி கொள்வார்கள். தினந்தோறும் பயிற்சி எடுக்க நாம் வழியை கண்டுபிடித்து போட்டிக்கு தயாராகி விடுவோம். ஆனால், மனதளவிலும், உடல் அளவிலும் நாம் எப்படி சோர்வாக இருக்கிறோம் என்று.. அனைத்தையும் கொஞ்சம் நிறுத்தி பார்த்தால் தான் தெரியும்,

பாண்டிங் நம்பிக்கை
விராட் கோலி இப்படி ஒரு சூழலில் தான் சிக்கி இருக்கிறார் என்பதை தெளிவாக கூற முடியும். அவர் இதே சூழலில் தொடர்ந்து சிக்கி இருக்க மாட்டார் என்று நம்புகிறேன் என்று பாண்டிங் கூறியுள்ளார். விராட் கோலிக்கு தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் இங்கிலாந்து தொடரில் கோலி களமிறங்குகிறார்.


Click it and Unblock the Notifications