Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியான முடிவு எடுத்தீங்க..!! நான் பார்த்து வளர்ந்த பையன் – பாண்டிங் மகிழ்ச்சி

பாலியல் புகாரில் சிக்கி ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெயின் விலகினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகுவதாகவும் அறிவித்தார்.ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளதால் புதிய கேப்டன் பொறுப்பை யாருக்கு வழங்குவது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் பெரிய குழப்பமே நிகழ்ந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவதாகவும், அவருக்கு துணை கேப்டனாக ஸ்மித் செயல்படுவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Ricky Ponting Welcomed the decision of New captain decision

அதன் படி, 66 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த உள்ளார். கம்மினஸ் நியமிக்கப்பட்டது ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், மறு தரப்புக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது. இதனிடையே பேட் கம்மின்ஸ் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் பாண்டிங், கேப்டன் பதவிக்கு ஏற்ற நபர் பேட் கம்மின்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

கம்மின்ஸ் அறிமுகமாகும் போது, அவருக்கு தாம் தான் தொப்பியை வழங்கி கவுரவித்ததாகவும், தற்போது ஆஸ்திரேலிய அணியையே வழிநடத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகவும் பாண்டிங் கூறியுள்ளார். அத்துடன் ஸ்மித் துணை கேப்டனாக நியமனம் செய்துள்ளது மிகவும் நல்ல முடிவு என்றும், அவரது அனுபவம் நிச்சயம் கம்மின்ஸ்க்கு உதவும் என்று கூறினார்.

இதே போன்று தாம் கேப்டனாக இருந்த நேரத்தில், அந்த பொறுப்பை மெக்ராத் ஏற்று அணியை வழி நடத்தி இருந்தால், 45 ஓவரையும் தொடர்ந்த மெக்ராத்தே வீசி இருப்பார் என கிண்டல் அடித்தார். உலகில் ஏன் பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பரே அதிகமாக கேப்டன் பொறப்புகளில் இருக்கிறார்கள் என்று நாம் யோசித்தால், வேகப்பந்துவீச்சாளர்கள் அடிக்கடி காயம் அடைய கூடியவர்கள். அப்படி காயமடைந்தால், அவர்களால் விளையாட முடியாது. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு காயம் அடையும் வாய்ப்பு குறைவு என்பதால், பேட்ஸ்மேன்களுக்கே அதிகளவில் கேப்டன்களாக உள்ளனர்.

Story first published: Friday, November 26, 2021, 19:23 [IST]
Other articles published on Nov 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+