Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. சூப்பர் ஓவரில் தரமான சம்பவம்.. ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ரிங்கு சிங்!

லக்னோ: உத்தரப் பிரதேச டி20 லீக் கிரிக்கெட் தொடரில் சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரிங்கு சிங் அணியை வெற்றிபெற வைத்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் மூலம் விளம்பரம் பெற்ற வீரர்களுக்கு மத்தியில், ஐபிஎல் தொடருக்கு விளம்பரமானவர் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் திறமை மூலம் அடித்தாரா அல்லது எதார்த்தமாக நடந்த ஒன்றா என்ற கேள்வி எழுந்தது.

Rinku Singh hits 3 consecutive sixes in the Super Over in the UPT20 League

அதனை தனது திறமை மூலம் ரிங்கு சிங் நிரூபித்து காட்டினார். 14 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 473 ரன்களை விளாசியதன் மூலம் ரிங்கு சிங்கின் திறமை அனைவருக்கும் தெரிய வந்தது. இதனால் இந்திய அணியின் ஃபினிஷிங் ரோல் ரிங்கு சிங்கிற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் வாய்ப்பு பெற்றார்.

ரிங்கு சிங் பேட்டிங் செய்ய களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே தனது திறமையை அனைவருக்கும் நிரூபித்தார். இந்திய அணி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசி 2 ஓவர்களில் 3 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி 21 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணியை வெற்றிபெற வைத்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Rinku Singh hits 3 consecutive sixes in the Super Over in the UPT20 League

இந்த நிலையில் ரிங்கு சிங் தனது மேஜிக்கை உத்தரப் பிரதேச டி20 லீக்கிலும் காட்டியுள்ளார். காசி ருத்ராஸ், மீரட் மேவ்ரிக்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் மீரட் மேரிக்ஸ் அணி 181 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க, அதனை காசி ருத்ராஸ் அணி எட்ட முடியாமல் சமன் செய்துள்ளது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய காசி ருத்ராஸ், 16 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இதன்பின் 17 ரன்கள் விளாசினால் வெற்றி என்ற நிலையில், ரிங்கு சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிவா சிங் வீசிய ஓவரின் முதல் பந்தில் ரன்கள் சேர்க்கப்படவில்லை. இதன்பின் அடுத்த 3 பந்துகளையும் ஹாட்ரிக் சிக்சர் விளாசி ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிங்கு சிங்கின் இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Story first published: Friday, September 1, 2023, 8:03 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+