மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து போய் இருந்தார். டி20 உலக கோப்பையில் அணியில் கூடுதல் வீரராக தான் சேர்க்கப்பட்டார் தவிர மெயின் ஆனியில் இடம்பெறவில்லை.
இது அப்போதே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் ரிங்கு சிங் தொடர்ந்து எந்த ஒரு தொடரிலும் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த சூழலில் டி20 ,ஒருநாள் போட்டிகளில் ரிங்கு சிங், சேர்க்கப்படாத போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பெயரை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் துலீப் கோப்பை தொடரில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது போன்ற வீரர் உள்ளூர் போட்டியில் ஆவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் எல்லாம் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள்.
கீழ் வரிசையில் களமிறங்கி அதிரடியாக ஆடக்கூடிய திறனை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பெற்று இருக்கிறார் என்று பலரும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால் டெஸ்ட் அணியில் ரிங்குவை சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த சூழலில் தான் ரிங்கு சிங்கிற்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. தற்போது வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பல சீனியர் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனால் துலீப் கோப்பை தொடரில் பல வீரர்கள் மிஸ் ஆவார்கள். இந்த சூழலில் இந்தியா பி அணியில் தேர்வு குழு தற்போது ரிங்கு சிங்கை சேர்த்து இருக்கிறது. இதன் மூலம் ரிங்கு சிங் தற்போது துலீப் கிரிக்கெட் போட்டியில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் யூபி டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ரிங்கு சிங், தற்போது அந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிங்கு சிங், என்னுடைய பணி உழைப்பது மட்டும்தான். நான் துலீப் கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். துலீப் கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட போது, அதில் நான் இடம்பெறவில்லை.
இருப்பினும் அது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் தொடர்ந்து உழைப்பது மட்டும்தான் என்னுடைய பணி. அதை நான் இன்றும் செய்து கொண்டிருக்கின்றேன். தற்போது இந்திய பி அணியில் நான் தேர்வு செய்யப்பட்டது நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். யூ பி டி 20 லீக் தொடரில் ஒரு கேப்டனாக என்னுடைய அணியை புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன் .தற்போது மாதப் கௌஷிக் கேப்டன் பணியை மேற்கொள்ள இருக்கின்றார்.
அவர் அணியை வெற்றி பெற வைப்பார் என்று நம்புகிறேன். யூபி டி20 தொடரில் விளையாடியதில் எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்து இருக்கிறது என்று ரிங்கு சிங் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 47 போட்டியில் விளையாடி 3173 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஏழு சதமும், 20 அரை சதமும் அடங்கும். இதில் ரிங்கு சிங்கின் சராசரி 54.70 ஆகும். இப்படி உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருப்பதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தி பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.
எப்படி தென்னாப்பிரிக்காவுக்கு ஜேபி டுமினி இருந்தாரோ, அதை போல் ரிங்கு சிங் இந்திய அணிக்கு இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் சென்னையில் 5 நாட்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். 5 நாட்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.