For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டி20 அணி பேட்டிங் வரிசை.. திலக் வர்மா சரிப்பட்டு வரமாட்டார்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித் அகார்கர், தனது முதல் பணியாக டி20 அணியை தேர்வு செய்து இருக்கிறார். இதில் அஜித் அகர்கர் அதிரடி வீரர் ரிங்கு சிங் சேர்க்காமல் தவறு செய்து விட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Rinku singh is the better choice than tilak varma feels akash chopra

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, திலக் வர்மாவை விட ரிங்கு சிங் நல்ல தேர்வாக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்திய அணியின் நடு வரிசையில் சூரியகுமார், சஞ்சீவ் சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்திய அணி நிர்வாகம் திலக் வர்மாவை நம்பர் மூன்றாவது வீரராக களமிறங்க வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு பேட்டிங் செய்யக்கூடிய வீரரை தான் தற்போது நாம் தேர்வு செய்ய வேண்டும். அந்த வீரர் கண்டிப்பாக ரிங்கு சிங்காக தான் இருப்பார். திலக் வர்மாவை நம்பர் மூன்றாவது வீரராக தான் நீங்கள் களமிறக்க வேண்டும். அப்படி பேட்டிங்கில் கீழ் வரிசையில் விளையாட வைக்க யோசித்தால் அது தவறான முடிவாக தான் இருக்கும்.

இஷான் கிஷன், சஞ்சு சாம்சனாக இருந்தால் அவர்கள் முதல் மூன்று இடங்களில் தான் பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் திலக் வர்மாவை நீங்கள் ஆறாவது வீரராக தான் விளையாட வைக்க போகிறீர்கள். இதே போல் சூரியகுமார் யாதவையும் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்கிற்கு கீழ் நீங்கள் விளையாட வைக்க கூடாது. இதனால் அவருக்கு மூன்று அல்லது நான்காவது இடம் தான் சரியானதாக இருக்கும்.

ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் விளையாட வைப்பீர்கள். திலக் வருமா ஆறாவது இடத்தில் இருப்பார். ஆனால் அது சரியான தேர்வாக இருக்குமா? இதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் திலக் வர்மா 11 இன்னிங்சில் 343 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 164 ஆகும். ஆனால் அதே ரிங்கு சிங் 14 போட்டிகளில் விளையாடி 474 ரகளை குவித்திருந்தார். இதில் சராசரி கிட்டத்தட்ட 60 ஆகும்.

Story first published: Thursday, July 6, 2023, 19:13 [IST]
Other articles published on Jul 6, 2023
English summary
Rinku singh is the better choice than tilak varma feels akash chopra இந்திய டி20 அணி பேட்டிங் வரிசை.. திலக் வர்மா சரிப்பட்டு வரமாட்டார்.. ஆகாஷ் சோப்ரா கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+