For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"காலி"னு நெனச்சீங்களா? ரிங்கு சிங் வந்து விட்டார்.. டி20 உலகக்கோப்பை அணியில் திடீர் என்ட்ரி

மும்பை: "ரிங்கு சிங்கின் கதை முடிந்தது.. இனி அவர் இந்திய அணியில் ஆடுவது கஷ்டம்" என்று பேசப்பட்ட நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நமது 'ஃபினிஷர்' ரிங்கு சிங்.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரைத் திட்டமிட்டு ஓரங்கட்டுவதாகவே பரவலாகப் பேசப்பட்டது. இதனால் உலகக்கோப்பை அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், பிசிசிஐ அந்த எண்ணத்தை பொய்யாக்கியுள்ளது.

Rinku Singh Makes Sensational Comeback in India Squad for T20 World Cup 2026

2023-ல் இந்திய அணிக்குள் நுழைந்த ரிங்கு சிங், தனக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புகளிலும் முத்திரையைப் பதித்தவர். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களைக் குவிப்பதால், ரிங்கு சிங்குக்கு பல போட்டிகளில் பேட்டிங் செய்யவே வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்புகளில் அவர் அணியை ஏமாற்றியது இல்லை.

தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முக்கியப் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளது அவரது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் முதன்மை ஃபினிஷர்களாக உள்ளனர். இவர்களுக்குச் சரியான மாற்று வீரராகவும், இடது கை பேட்ஸ்மேன் தேவைப்படும் இடத்திலும் ரிங்கு சிங் பயன்படுத்தப்படுவார்.

மேலும் 3 மற்றும் 4வது இடங்களில் ஆடும் சூர்யகுமார் யாதவ் அல்லது திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டாலோ, அல்லது ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றினாலோ ரிங்கு சிங் அணியின் சமநிலையை காப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிங்கு சிங் அணியில் இல்லை என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது. இப்போது அவர் அணிக்குள் வந்திருப்பது சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. "திறமையானவனை யாராலும் ரொம்ப நாள் ஓரங்கட்ட முடியாது" என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல், நீண்ட நாட்களாக அணியில் இல்லாத இஷான் கிஷனும் இந்த அணியில் விக்கெட் கீப்பராக இடம்பிடித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
அபிஷேக் சர்மா
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
சிவம் துபே
அக்‌ஷர் படேல் (துணை கேப்டன்)
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
ஜஸ்பிரித் பும்ரா
வருண் சக்கரவர்த்தி
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
ஹர்ஷித் ரானா
ரிங்கு சிங்
வாஷிங்டன் சுந்தர்

Story first published: Saturday, December 20, 2025, 15:33 [IST]
Other articles published on Dec 20, 2025
English summary
Rinku Singh Makes Sensational Comeback in India Squad for T20 World Cup 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+