Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராவணன் மவன்டா.. ஒற்றை ஆளாக நின்று வித்தையை காட்டிய ரிங்கு சிங்.. ரஞ்சியில் தரமான சம்பவம்!

மும்பை: கோவா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் உத்தரப் பிரதேசம் அணிக்காக களமிறங்கிய ரிங்கு சிங் ஒற்றை ஆளாக நின்று 186 பந்துகளில் 2 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 118 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் உத்தரப் பிரதேச அணி மொத்தமாக 202 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், ரிங்கு சிங் தனியாக 118 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இருந்து ரிங்கு சிங் கழற்றிவிடப்பட்டார். நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் உள்ளிட்டோர் இந்திய அணிக்காக விளையாடி வரும் சூழலில், ரிங்கு சிங் பவுலிங் செய்ய முடியாது என்ற காரணத்தால் தேர்வு செய்யாமல் தேர்வுக் குழுவினர் புறக்கணித்து வருகின்றனர்.

Rinku Singh

அதேபோல் இந்திய ஏ அல்லது டெஸ்ட் அணியிலோ கூட ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் ரிங்கு சிங், என் கடமை பேட்டிங் செய்வதே என்று ரஞ்சி டிராபி தொடங்கி அத்தனை உள்ளூர் போட்டிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறார். ரஞ்சி டிராபி சீசன் தொடங்கியுள்ள நிலையில், கோவா அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேசம் அணி களமிறங்கியது.

முதல் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேசம் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 186 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 118 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்திருக்கிறார். 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போது ரிங்கு சிங் களம் புகுந்தார்.

அவருக்கு தொடக்க வீரர் மாதவ் கெளசிக் மட்டுமே கம்பெனி கொடுத்தார். அவரும் 45 ரன்களில் ஆட்டமிழந்த, பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் அவர்களை வைத்து கொண்டு ரிங்கு சிங் அணியின் ஸ்கோரை 202 ரன்கள் வரை ல்கொ கொண்டு சென்றுள்ளார். இதனால் ரிங்கு சிங்கின் பேட்டிங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே முதல் ரஞ்சி போட்டியிலும் ரிங்கு சிங் 168 பந்துகளுக்கு 112 ரன்கள் எடுத்து சதம் விளாசி இருந்தார். தற்போது 2 ரஞ்சி போட்டிகளிலும் ரிங்கு சிங் சதம் விளாசி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் 55 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 11 சதங்கள், 23 அரைசதங்களை விளாசி பேட்டிங் சராசரியை 60க்கும் அதிகமாக வைத்துள்ளார். இதனால் விரைவில் டெஸ்ட் அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

Story first published: Sunday, October 18, 2026, 21:09 [IST]
Other articles published on Oct 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+