For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விழுந்த டோணி.. எழுந்த கோஹ்லி.. கிரிக்கெட் உலகைக் கலக்கிய 2015

சென்னை: 2015ம் ஆண்டு, டோணி என்ற மாபெரும் சகாப்தத்தின் ஓய்வுக்கு முன்னுரை எழுதிய ஆண்டாக அமைந்தது. கோஹ்லி என்ற விஸ்வரூபத்திற்கு பிள்ளையார் சுழியும் இந்த ஆண்டில்தான் போடப்பட்டது.

சச்சின் டெண்டுல்கருக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட்டை முழுமையாக ஆக்கிரமித்த தனி மனிதர் என்றால் அது டோணி மட்டுமே.

டோணியைத் தாண்டி இந்திய கிரிக்கெட்டை பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு அவரது அட்டகாசமான ஆதிக்கம் நீடித்து வந்த நிலையில் இந்த ஆண்டு அது வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

டோணியின் தொடர் தோல்வி

டோணியின் தொடர் தோல்வி

இந்த ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டித் தொடர்களிலும், டுவென்டி 20 தொடர்களிலும் இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. டோணி தலைமையில் தொடர் தோல்விகளே நமக்குக் கிடைத்தன.

ஜனவரியில் செம அடி

ஜனவரியில் செம அடி

ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியாவுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. உலகக் கோப்பைப் போட்டியிலும் அரை இறுதி வரை வந்து தோல்வியுற்றுத் திரும்பி ஏமாற்றியது.

வங்கதேசத்துடன் மோசமான தோல்வி

வங்கதேசத்துடன் மோசமான தோல்வி

உலகக் கோப்பைத் தோல்வித் துயரத்திலிருந்து திரும்பிய கையோடு வங்கதேசம் போய் டோணி அன் கோ ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து திரும்பியது ரசிகர்களை அதிர வைத்தது.

தென் ஆப்பிரிக்காவிடம் அடி

தென் ஆப்பிரிக்காவிடம் அடி

அதேபோல தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த ஒரு நாள் தொடரையும் டோணி தலைமையிலான இந்திய அணி இழந்தது ரசிகர்களை ரொம்பவே வெறுப்படித்தது.

ஒரு வெற்றி கூட பெறாத டோணி

ஒரு வெற்றி கூட பெறாத டோணி

வெற்றிக் கேப்டனாக அறியப்படும் டோணிக்கு, இந்த ஆண்டு ஒரு தொடரில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்பது மிகப் பெரிய சோகமாக அமைந்தது.

ஏறி வந்த கோஹ்லி

ஏறி வந்த கோஹ்லி

டோணி நிலை இப்படி இருக்க மறுபக்கம் விராத் கோஹ்லி டெஸ்ட் கேப்டனாக இந்த ஆண்டு இரண்டு முறை சந்தோஷப்பட்டார்.

இலங்கையில் அதிரடி

இலங்கையில் அதிரடி

இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா கோஹ்லி தலைமையில் வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றியானது 22 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் இந்தியாவுக்குக் கிடைத்ததாகும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு செம அடி

தென் ஆப்பிரிக்காவுக்கு செம அடி

அடுத்து இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரையும் கோஹ்லி தலைமையிலான அணி வென்றது. 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்கியது இந்தியா.

இப்படி டோணிக்கு அஸ்தமனத்தையும், கோஹ்லிக்கு புதிய வெளிச்சத்தையும் கொடுத்த ஆண்டாக 2015 அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Monday, December 28, 2015, 12:26 [IST]
Other articles published on Dec 28, 2015
English summary
The year 2015 saw the rise of Kohli as the winning captain of Indian test team and the fall of Dhoni as the losing ODI captain.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+