இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக மாறுவாரா ரிஷப் பந்த்?
லண்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் அறிமுக வீரராக களமிறங்கினார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கிய 291ஆவது டெஸ்ட் வீரர் ஆவார்.

இப்போட்டியில் ரிஷப் பந்த் குறிப்பிடத்தகுந்த அளவில் பங்காற்றினார். பேட்டிங்கை பொறுத்தவரை அதிரடியாக ஆரம்பித்த அவரது பேட்டிங் பெரிய ரன்களை அடிக்கும் அளவிற்கு மாற்றம் பெறவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 25 ரன்களை மட்டுமே எடுத்தார். இவர் தனது முதலாவது ரன்னை சிக்ஸர் அடித்து எடுத்தது உலக சாதனையாகும்.
விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை அவர் ஓரளவிற்கு சிறப்பாகவே செய்தார். அவர் மொத்தம் 7 கேட்ச்களை பிடித்து அறிமுக போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் அவர் பட்லருக்கு இரண்டாவது இன்னிங்சில் கோட்டை விட்ட ஒரு கேட்ச் இந்திய அணியின் வெற்றியை அடுத்த நாளுக்கு தள்ளிப்போட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவரே கீப்பிங் பணியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஒட்டுமொத்தமாக ரிஷப் பந்த் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். பேட்டிங்கில் அவர் தன்னை டெஸ்ட் போட்டிகளுக்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டால் நீண்ட நாள்களுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக பங்காற்றலாம் என்பதில் மாற்று கருத்தில்லை.
Story first published: Saturday, August 25, 2018, 15:00 [IST]
Other articles published on Aug 25, 2018


Click it and Unblock the Notifications