For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை ஜெராக்ஸ் எடுக்கும் ரிஷப் பண்ட்.. அடுத்த நிரந்தர விக்கெட் கீப்பர் இவர்தான்

Recommended Video

தோனியை முந்தி ரிஷப பந்த் புது சாதனை படைத்துள்ளார்- வீடியோ

ஹைதராபாத் : இந்திய டெஸ்ட் அணியின் புதிய விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ள ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்னதாக ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டிலும் 92 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அடித்தும் சதத்தை தவறவிட்டார். இதன் மூலம் சில சாதனைகளை செய்துள்ளார் ரிஷப் பண்ட்.

[சனத் ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்திய ஐசிசி.. வேறு திசையில் செல்லும் பிக்ஸிங் விவகாரம்]

தோனியை முந்தினார்

தோனியை முந்தினார்

தோனி தன் முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 297 ரன்கள் எடுத்திருந்தார். ரிஷப் பண்ட் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 346 ரன்கள் எடுத்துள்ளார். தோனிக்கு அடுத்து அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தான் இருப்பார் என கூறப்பட்டு வரும் நிலையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தோனியை முந்தி தன் வாய்ப்பை நியாயப்படுத்தி உள்ளார் ரிஷப் பண்ட்.

92இல் ஒற்றுமை

92இல் ஒற்றுமை

மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் தோனியும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ரிஷப் பண்ட்டும் தோனி போன்றே அதிரடி ஆட்டம் ஆடுகிறார். அதுவும் கூட ரிஷப் 90 ரன்கள் அடித்த பின் ஆட்டமிழக்க ஒரு காரணமாக இருக்கிறது.

டிராவிட் - ரிஷப் பண்ட்

டிராவிட் - ரிஷப் பண்ட்

தோனி மட்டுமில்லாமல், இந்தியாவின் மற்றொரு தற்காலிக விக்கெட் கீப்பராக இருந்த ராகுல் டிராவிட் போன்றே ரிஷப் பண்ட்டும் அடுத்தடுத்த இன்னிங்க்ஸ்களில் 90 ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். டிராவிட் 1997இல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 92 மற்றும் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ராஜ்கோட் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸிலும், அடுத்து ஆடிய ஹைதராபாத் போட்டியின் முதல் இன்னிங்க்ஸிலும் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணியில் இடம் உறுதி

அணியில் இடம் உறுதி

ஆக மொத்தத்தில் இந்திய அணியில் தன் இடத்தை பசை போட்டு ஒட்டிக் கொண்டுள்ளார் ரிஷப் பண்ட். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பிங்கில் சற்று அனுபவம் பெற்று விட்டால் தோனியின் இடத்திற்கு சரியான நபராக இருப்பார் ரிஷப் பண்ட்.

Story first published: Monday, October 15, 2018, 19:36 [IST]
Other articles published on Oct 15, 2018
English summary
Rishab Pant 92 in two successive innings hit some record books
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X