
எப்படி
இன்றைய போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சிறப்பாக கீப்பிங் செய்து வருகிறார். கீப்பிங் நிற்கும் பண்ட் பவுலர்களுக்கு சிறப்பாக அறிவுரை வழங்கி வருகிறார். இப்படி போடுங்க அஸ்வின், உள்ளே போடுங்கள் அஸ்வின் என்று சிறப்பாக அறிவுரை வழங்கி வருகிறார்.

ஸ்பின்
பொதுவாக ஸ்பின் பவுலிங் செய்யும் போது கீப்பர் கொடுக்கும் அறிவுரை மிகவும் முக்கியம். ஸ்டம்பிற்கு பின் இருந்து கொண்டு கீப்பர் சொல்லும் விஷயங்கள்தான் ஸ்பின் பவுலர் விக்கெட் எடுக்க எளிதாக உதவும். தோனி கீப்பராக இருந்த போது அஸ்வின் தொடங்கி குல்தீப் யாதவ் வரை பலருக்கு ஒவ்வொரு ஓவரிலும் அறிவுரை வழங்குவார்.

அறிவுரை
இந்த நிலையில் இந்திய அணியில் கீப்பர்கள் கே. எல் ராகுல், விர்த்திமான் சாகா ஆகியோர் இதேபோல் பவுலர்களுக்கு அறிவுரை வழங்குவது இல்லை. இவர்கள் கீப்பிங் நிற்கும் போது பொதுவாக பேசுவது இல்லை. ஆனால் பண்ட் மிகவும் சிறப்பாக பவுலர்களை வழி நடத்துகிறார். இன்று அஸ்வின் 13வது ஓவர் வீசும் போது அதில் மேத்யூ வேட் பவுண்டரி அடித்தார்.

அஸ்வின்
அஸ்வின் தனது பந்தை வெளியே போட்ட போது மேத்யூ அதை பவுண்டரி அடித்தார். இதையடுத்து அஸ்வினிடம் பண்ட்.. பந்தை உள்ளே போடுங்கள் ஆஷ்.. மேத்யூ வேட் சுற்றுவார் என்று கூறினார். அதேபோல் பந்தை அஸ்வின் உள்ளே போட்டார். இதை தேவையின்றி சுற்றிய மேத்யூ கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

சிறப்பு
பண்ட் சொன்னபடியே அஸ்வின் பவுலிங் செய்தார். இதில் சரியாக விக்கெட் விழுந்தது. இன்று முழுக்க பண்ட் தோனி போலஅறிவுரை வழங்கினார். பீல்டிங் நிற்க வைப்பதிலும் பண்ட் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











