Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேர்ல்ட் கப் டீம்ல எனக்கு ஒரு இடம் போடுங்க.. அதிரடி ஆட்டம் ஆடிய ரிஷப் பண்ட்!!

Recommended Video

அதிரடி ஆட்டம் ஆடிய ரிஷப் பண்ட்!!- வீடியோ

திருவனந்தபுரம் : இந்திய டெஸ்ட் அணியில் முத்திரை பதித்த ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இடம் பிடிக்காத நிலையில், அவரது உலகக்கோப்பை இடம் கேள்விக்குறியாக இருந்தது.

தற்போது இந்தியா ஏ அணிக்காக ஆடி வரும் ரிஷப் பண்ட், அதிரடியாக அரைசதம் அடித்து தெறிக்க விட்டுள்ளார்.

ரிஷப் பண்ட் அரைசதம்

ரிஷப் பண்ட் அரைசதம்

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இடையே ஆன அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். அந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 76 பந்துகளில் 73 ரன்கள் அடித்து கலக்கினார்.

உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்

உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்

உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என கூறப்பட்டாலும், அவரின் ஒருநாள் போட்டி பார்ம் கேள்விக்குறியாக இருந்தது. கடைசியாக அவர் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் பெரிய அளவில் பண்ட் ரன் குவிக்கவில்லை.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்

இந்த நிலையில், இந்தியா ஏ அணியில் அரைசதம் அடித்துள்ள ரிஷப் பண்ட், இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தொடரில் ரிஷப் பண்ட் ஓரளவு ரன் குவித்தாலும், உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

ராகுல் என்ன செய்கிறார்?

ராகுல் என்ன செய்கிறார்?

இந்தியா ஏ அணியில் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இடை நீக்கம் செய்யப்பட்ட ராகுலும் இடம் பெற்று ஆடி வருகிறார். அவர் நான்காம் போட்டியில் 77 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார்.

Story first published: Wednesday, January 30, 2019, 14:40 [IST]
Other articles published on Jan 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+