For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடிச்சா சிக்ஸ் தான்.. அதிரடியாக அசத்திய ரிஷப் பந்த்

ட்ரெண்ட்பிரிட்ஜ்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் ரிஷப் பந்த் ஒரு புதிய சாதனையை படைத்தார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 97 ரன்களில் ஆட்டமிழந்த போது களமிறங்கினார் ரிஷப் பந்த். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே அற்புதமாக ஒரு சிக்ஸர் அடித்தார். இதுவே டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் ரன்கள் ஆகும். அதாவது முதலாவது ரன்னையே சிக்ஸராக அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Rishab pant hits first scoring shot as six

களமிறங்கிய இரண்டாவது பந்திலேயே,அதுவும் தனது முதல் போட்டியிலேயே எதையும் பொருட்படுத்தாமல் அவர் அடித்த சிக்ஸர் அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை. இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்பது தனிச்சிறப்பு.

உலக அளவில் இந்த சாதனையை படைத்த 12ஆவது வீரர் இவராவார்.

உலக அளவில் முதல் ரன்களை சிக்ஸர்களாக அடித்த வீரர்கள் விவரம்.

எரிக் பிரீமேன், சார்லிஸ்லே பெஸ்ட்,கீத் டைபெங்வா,டேல் ரிச்சர்ட்ஸ்,ஷபியுல் இஸ்லாம்,ஜகுருள் இஸ்லாம்,அல் அமின் ஹொசைன், மார்க் கிரேக்,தனஞ்செய டி சில்வா,கமருள் இஸ்லாம்,சுனில் அம்பரிஸ் மற்றும் ரிஷப் பந்த்






Story first published: Sunday, August 19, 2018, 15:16 [IST]
Other articles published on Aug 19, 2018
English summary
Rishab pant hits first scoring shot as six
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+