Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி அறிமுகம் உறுதி.. அப்ப தோனி அவ்ளோதானா?

கவுஹாத்தி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஒருநாள் தொடர் அக்டோபர் 21 முதல் நடைபெற உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான உத்தேச 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து முதல் ஒருநாள் போட்டியில் அவர் நிச்சயம் அறிமுகம் செய்யப்படுவார் என தெரிய வந்துள்ளது.

ரிஷப் கீப்பரா? பேட்ஸ்மேனா?

ரிஷப் கீப்பரா? பேட்ஸ்மேனா?

ரிஷப் பண்ட் நாளை ஆடும் பட்சத்தில், விக்கெட் கீப்பராக அவர் செயல்படுவாரா? அல்லது பேட்டிங் மட்டும் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி இப்போது விக்கெட் கீப்பாரக இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் அவரது இடத்தை நிரப்ப அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்டில் உறுதியான ரிஷப் பண்ட்

டெஸ்டில் உறுதியான ரிஷப் பண்ட்

டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே, ரிஷப் பண்ட் தன் இடத்தை நிலையானதாக மாற்றிக் கொண்டுள்ளார். அடுத்த சில டெஸ்ட் தொடர்களுக்கு ரிஷப் பண்ட் நிச்சயம் இடம் பிடித்து விடுவார்.

ரிஷப், தோனி இருவரும் உண்டு

ரிஷப், தோனி இருவரும் உண்டு

ஒருநாள் போட்டி அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தற்போது அதிரடி பேட்ஸ்மேன் என்ற தகுதியில் அணியில் இணைந்துள்ளார். தோனியின் பெயரும் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளதை அடுத்து தோனி விக்கெட் கீப்பராகவும், ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாகவும் ஒரே போட்டியில் இணைந்து ஆடுவர் என தெரிகிறது.

ப்ரித்வி ஷா இல்லை

ப்ரித்வி ஷா இல்லை

அதே போல, ப்ரித்வி ஷா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் அளிப்பார் என செய்திகள் வெளியான நிலையில், உத்தேச அணியில் ப்ரித்வி ஷா இடம் பெறவில்லை. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் பெயரே துவக்க வீரர்களாக இடம் பெற்றுள்ளது.

Story first published: Saturday, October 20, 2018, 17:58 [IST]
Other articles published on Oct 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+